கமல்ஹாசனின் மனைவியாக நடிக்க வயசு வித்தியாசம் ஒரு பொருட்டல்ல என்று பிரபல பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்காவின் மகளும் பாலிவுட் நடிகையுமான சோனாக்ஷி சின்கா பரபரப்பு பேட்டி அளித்தார். செல்வராகவன் இயக்கத்தில் வெளிவர இருக்கும் புதிய படத்தில் கமல்ஹாசனின் மனைவியாக நடிக்க இருப்பவர் சோனாக்ஷி. இவர் கமல்ஹாசனை விட 33 வயது சிறியவர். இது குறித்து சோனாக்ஷி கூறுகையில், கமல்ஹாசனின் மனைவியாக நடிக்க வயசு வித்தியாசம் ஒரு தடையாக இருக்கும் என்று நான் கருதவில்லை. கமல்ஹாசனுக்கு இணையாக நடிக்க என்னால் முடியும். என்னை விட மிக வயதான சல்மான, அக்ஷய் ஆகியோருடன் நடித்துள்ள எனக்கு கமலுடன் நடிப்பதில் பிரச்னை இருக்காது. உண்மை வாழ்க்கையிலேயே வயது வித்தியாசம் ஒரு பிரச்னையாக இல்லாதபோது சினிமாவில் மட்டும் எப்படி பிரச்னையாக இருக்க முடியும்? காமிரா முன் நின்று விட்டால் அங்கு வயது பற்றி கவலை இல்லை; நடிக்கும் கதாபாத்திரம்தான் முக்கியம். கமலுடன் நடிப்பதென்பது எளிதான காரியம் அல்ல; ஆரம்பத்தில் சற்று தயக்கமாக இருந்தது; இருந்தாலும் அதற்கான துணிச்சல் என்னிடம் இருக்கிறது. மொழியும் ஒரு பிரச்னையாக இருக்காது என்றார்.
0 comments :
Post a Comment