background img

புதிய வரவு

திகைப்பில் திராவிட கட்சிகள்

திருச்சி : அ.தி.மு.க., - தி.மு.க., - தே.மு.தி.க., சார்பில், சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. அ.தி.மு.க.,வில், 12 ஆயிரத்து 200 பேர் மனு அளித்தனர். தி.மு.க., சார்பில், 15 ஆயிரம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. தே.மு.தி.க.,வில், 7,750 விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.
தே.மு.தி.க., 41 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஒரு தொகுதிக்கு சராசரியாக, 189 பேர் பணம் கட்டியுள்ளனர். அதுவே, தி.மு.க.,வில் ஒரு தொகுதிக்கு, சராசரியாக, 120 பேரும், அ.தி.மு.க.,வில், 85 பேரும் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர். விருப்பமனு தாக்கல் விஷயத்தில், திராவிட கட்சிகளை பின்னுக்குத்தள்ளி தே.மு.தி.க.,வினர் அதிக சதவீதத்தில் விருப்பமனு தாக்கல் செய்துள்ளது, பெரிய திராவிட கட்சிகளை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts