background img

புதிய வரவு

குண்டு துளைக்காத மண்டபத்தில் இன்று வருண் திருமணம்

வாரணாசி:முன்னாள் பிரதமர் இந்திராவின் பேரனும், மேனகா மகனுமான வருண் திருமணம், காசி காமகோடீஸ்வர் கோவிலில் இன்று காலை நடக்கிறது.முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் இரண்டாவது மகன் சஞ்சய் காந்தி. இவரது ஒரே மகன் வருண்.இவருக்கும், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த கிராபிக் டிசைனர் யாமினிக்கும் இன்று காலை, வாரணாசியில் உள்ள காசி காமகோடீஸ்வர் கோவிலில் திருமணம் நடக்கிறது.
இந்திரா குடும்பத்தில் 14 ஆண்டுகளுக்கு பின்னர் இத்திருமணம் நடைபெறுவதால், முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.காங்கிரஸ் தலைவர் சோனியா மகள் பிரியங்கா, திருமணத்தில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேனகாவின் தாய் கடந்த திங்கள் கிழமை டில்லியில் இறந்து விட்டதால், டில்லியில் நடக்கவிருந்த திருமண வரவேற்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.திருமணத்திற்காக நேற்று மாலையே வருண் குடும்பத்தினர் கோல்கட்டா வந்து சேர்ந்தனர்.
முதல் சடங்காக நேற்று மாலை, மணமக்களுக்கு மஞ்சள் பூசும் விழா நடந்தது. நிகழ்ச்சியை சேகரிக்க, பத்திரிகையாளர்களுக்கு என தனி இடம் கோவிலில் ஒதுக்கப்பட்டுள்ளது.மும்பை மற்றும் கோல்கட்டாவில் இருந்து வரவழைக்கப்பட்ட பூக்களைக் கொண்டு, குஜராத் மாநிலம் வதோதராவை சேர்ந்த அலங்கார வல்லுனர்கள் திருமண மண்டபத்தை அலங்கரித்தனர். மண்டபம் மற்றும் அதை சுற்றிய வெளிப்புறப் பகுதி முழுவதும் குண்டுகள் துளைக்காதபடி அமைக்கப்பட்டுள்ளது.காலை விருந்தில் கோல்கட்டாவின் இனிப்பு தயிர், வாரணாசியின் உப்பு கலந்த ஸ்நேக்ஸ், ரசகோலா, ரசமலாய் உட்பட பலகாரங்கள் இடம் பெறுகின்றன.
தோல் பொருட்களுக்கு தடை:* திருமணத்தின் போது மணமகன் வருண், கையால் டிசைன் செய்யப்பட்ட குர்தா, பைஜாமா, காஷ்மீர் டர்பன், ராஜஸ்தான் ஷூ அணிகிறார்.*நாற்பது ஆண்டுகளுக்கு முன், மேனகா திருமணத்திற்கு பரிசாக இந்திரா வழங்கிய பனாரஸ் பட்டுச் சேலையை மணப்பெண் யாமினி அணிகிறார்.*மேனகா விலங்குகள் விரும்பி என்பதால், மண்டபத்தில் எந்த இடத்திலும் தோல் சம்பந்தப்பட்ட பொருள் இடம் பெறாது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts