தேவையானவை
மைதா மாவு - 150 கிராம்
தேங்காய் (துருவியது) - 1 கப்
சர்க்கரை - 50 கிராம்
ஏலக்காய் - 6
நெய் (அல்லது) டால்டா - 2 டேபிள் ஸ்பூன்
செய்யும் முறை
மைதாமாவில் சிறிது நெய்விட்டு தண்ணீர் சேர்த்து சப்பாத்திக்குப் பிசைவது போல் பிசைய வேண்டும்.
சிறிய உருண்டைகளாகச் செய்து வைத்துக் கொள்ளவும்.
தேங்காயைத் துருவிச் சர்க்கரையும் ஏலக்காயும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
உருண்டைகளாகச் சப்பாத்தி இடுவது போல் வட்டமாக இட்டுக் கொண்டு நடுவில் இனிப்பை வைத்து பப்ஸ் செய்யும் அச்சால் வடிவம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு நெய்யைக் காய வைத்து ஒவ்வொன்றாகப் போட்டு வேக வைத்து எடுக்கவும்.
பிறகு அடுக்கி வைக்கும்பொழுது ஒவ்வொன்றின் மேலும் வண்ணத் தேங்காய்ப் பூவைத் தூவி வைத்தால் அழகாக இருக்கும்.

0 comments :
Post a Comment