புதுடில்லி:மேற்கு வங்க அரசியலில் கடந்த ஒரு வாரமாக நிலவி வந்த பரபரப்பு முடிவுக்கு வந்துள்ளது. திரிணமுல் காங்கிரசுக்கும், காங்கிரசுக்கும் இடையே, தொகுதி பங்கீடு விவகாரத்தில் நேற்று உடன்பாடு ஏற்பட்டது. இதன்படி, காங்கிரசுக்கு 65 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. காங்., தலைவர் சோனியாவுடன் மம்தா டெலிபோனில் பேசிய பின் இம்முடிவு ஏற்பட்டது.மேற்கு வங்க சட்டசபை தேர்தல் ஆறு கட்டங்களாக நடக்கிறது. ஆளும் இடதுசாரி கூட்டணி ஒரு அணியாகவும், மம்தாவின் திரிணமுல் - காங்கிரஸ் ஒரு கூட்டணியாகவும் தேர்தலை சந்திக்கின்றன. இடதுசாரி கூட்டணி கட்சிகள், தங்கள் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை முன்கூட்டியே வெளியிட்டன.
இருந்தாலும், காங்கிரசுக்கும், திரிணமுல்லுக்கும் இடையே, தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நிலவி வந்தது.காங்கிரஸ் கட்சி சார்பில் 90 தொகுதிகள் கேட்கப்பட்டன. ஆனால், 45 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க, மம்தா முன்வந்தார். இதையடுத்து, தனது கோரிக்கையை 70ஆக காங்கிரஸ் குறைத்தது. ஆனாலும், "60 தொகுதிகளுக்கு மேல் ஒதுக்க முடியாது' என, மம்தா பிடிவாதம் பிடித்தார். இதனால், இழுபறி நீடித்தது.
இந்நிலையில், மூன்று நாட்களுக்கு முன், தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்படுவதற்கு முன் பாகவே, தனது கட்சி சார்பில் போட்டியிடும் 228 வேட்பாளர்களின் பெயர்களை, மம்தா பானர்ஜி தன்னிச்சையாக அறிவித்தார். காங்கிரசுக்கு 64 தொகுதிகளை மட்டுமே விட்டுக் கொடுத்தார்.மேலும், "காங்கிரசுக்கு 64 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கு மேலும், எங்களால் தாமதம் செய்ய முடியாது. இந்த 64 தொகுதிகளை ஏற்க, காங்கிரஸ் முன்வராவிட்டால், அனைத்து தொகுதிகளிலும், எங்கள் கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவர்' என்றார்.மம்தாவின் இந்த அதிரடி போக்கு, காங்கிரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய நிதியமைச்சருமான பிரணாப் முகர்ஜி, மம்தாவை தொடர்பு கொண்டு பேசியும், சுமுக முடிவு எட்டப்படவில்லை.
இந்நிலையில், வெளிநாடு சென்றிருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா நேற்று அதிகாலை டில்லி திரும்பினார். இதன்பின், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, சோனியாவின் வீட்டுக்கு சென்று, அவருடன் ஆலோசனை நடத்தினார்.இந்த ஆலோசனை ஒரு மணி நேரம் நீடித்தது. அப்போது, திரிணமுல் கூட்டணியை ஆதரித்து, சோனியா பேசியதாக கூறப்படுகிறது. மம்தாவுடனும், தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினர். இதையடுத்து, இருதரப்புக்கும் இடையே தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்பட்டது. காங்கிரஸ் 65 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. திரிணமுல் காங்கிரஸ் 227 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணி கட்சியான "சுசி'க்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஷகீல் அகமது கூறியதாவது:மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கும், திரிணமுல் காங்கிரசுக்கும் இடையே, தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதன்படி, காங்கிரஸ் கட்சி 65 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த கூட்டணி, மேற்கு வங்கத்தில் இடதுசாரி கூட்டணி ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைக்கும்.தொகுதி பங்கீட்டில் திரிணமுல் காங்கிரசுடன், நாங்கள் எந்தவித சமரசமும் செய்து கொள்ளவில்லை. அனைத்து நடவடிக்கைகளுமே நேர்மையாக நடந்தது. எந்த ஒரு அரசியல் கட்சியுமே, தேர்தலில் அதிகமான தொகுதிகளில் போட்டியிடுவதையே விரும்பும். ஆனால், பேச்சுவார்த்தை நடக்கும் போது தான், எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது இறுதி செய்யப்படும்.இவ்வாறு ஷகீல் அகமது கூறினார்.மேற்கு வங்க மாநில காங்., தலைவர் மனாஸ் புனியாவிடம், "தொகுதி பங்கீடு, உங்களுக்கு திருப்தி அளிக்கிறதா' என, செய்தியாளர்கள் கேட்ட போது, கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்.
இதன்பின் அவர் கூறுகையில், "காங்கிரஸ் ஒரு தேசிய கட்சி. நான், அதன் மாநில தலைவர். இங்குள்ள கட்சி நிர்வாகிகளின் விருப்பத்தை, கட்சி தலைமைக்கு ஏற்கனவே தெரிவித்து விட்டேன். தற்போது, கட்சி மேலிடம் முடிவு எடுத்துள்ளது. காங்கிரஸ் தலைமை எடுத்துள்ள முடிவுக்கு, நாங்கள் கட்டுப்படுவோம்' என்றார்.
"கம்யூனிஸ்ட்டை தோற்கடிப்போம்'திரிணமுல் தலைவர் மம்தா பானர்ஜி கூறியதாவது:தொகுதி பங்கீட்டில் காங்கிரசுடன், சுமுக உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த புதிய உடன்பாடு காரணமாக, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சில தொகுதிகள் மாற்றப்பட்டுள்ளன. மேற்கு வங்கத்தில் ஜனநாயகத்தை மீண்டும் கொண்டு வரும் வகையில், எங்கள் கூட்டணி தேர்தலை சந்திக்கும்.காங்கிரசுடன் இணைந்து, மேற்கு வங்கத்தில் இடதுசாரி கட்சிகளின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்ற நம்பிக்கை உள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தின் தொழில் துறை, விவசாயம் ஆகியவற்றின் முன்னேற்றத்துக்கு பாடுபடுவோம். ஊழலை ஒழிப்போம்.இவ்வாறு மம்தா கூறினார்.

0 comments :
Post a Comment