background img

புதிய வரவு

ஏப்ரலில் காங்., கட்சியுடன் இணைப்பு விழா: சிரஞ்சீவி

புதுடில்லி:""காங்கிரஸ் கட்சியுடன் பிரஜா ராஜ்யம் கட்சியை இணைக்கும் விழா, ஏப்ரலில் நடைபெறும்,'' என, நடிகர் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்திக்க நடிகர் சிரஞ்சீவி நேற்று முன்தினம் டில்லி வந்தார்.
அப்போது அவர் கூறியதாவது:சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது படேலிடம், ஆந்திராவில் நிலவும் பல்வேறு அரசியல் பிரச்னைகள் குறித்து பேச்சு நடத்த உள்ளேன். பிரஜா ராஜ்ய கட்சியை காங்கிரசுடன் இணைப்பது குறித்து முக்கியமாக விவாதிக்கப்படும். இதுதொடர்பான விழா ஏப்ரலில் நடைபெறலாம். ஆந்திராவில் எந்த இடத்தில் இணைப்பு விழா நடைபெறும் என்பது பின்னர் தெரியவரும்.தமிழகத்தில் சட்டசபை தேர்தலில், பிரசாரம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. காங்கிரசில் இணைந்த பின், நாங்கள் அனைவரும் ஒன்றே என்பதால் காங்கிரஸ் தலைமை எந்தவிதமான உத்தரவு பிறப்பித்தாலும், அதை ஏற்று செயல்படுவேன். தமிழகத்தில் மட்டுமே இப்போதைக்கு நான் பிரசாரம் செய்வேன்.இவ்வாறு சிரஞ்சீவி கூறினார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts