background img

புதிய வரவு

சினிமா துறையில்“வழிகாட்டி இல்லாமல் தவறுகள் செய்தேன்” இலியானா

“கேடி” படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் இலியானா. தற்போது விஜய்யுடன் நண்பர் படத்தில் நடிக்கிறார். இலியானா அளித்த பேட்டி வருமாறு:-

சினிமாவில் நான் அறிமுகமான போது தெரிந்தவர்கள் இல்லை. வழிகாட்ட ஆள் இல்லாமல் திணறினேன். இதனால் சில தவறுகளையும் செய்தேன். அந்த தவறுகளில் இருந்து நிறைய பாடம் கற்றுக் கொண்டேன்.

இப்போது பக்குவப்பட்டு விட்டேன். என்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் மொத்த கதையையும் கேட்கிறேன். எனக்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே நடிக்க சம்மதிக்கிறேன்.

பணம் சம்பாதிப்பது மட்டும் என் குறிக்கோள் இல்லை. ஒரு வருடத்துக்கு ஒரு படம் நடித்தால் கூட போதும் என் கேரக்டர் பேசப்பட வேண்டும். வங்கி கணக்கை பார்த்தால் நல்ல நடிகை என்ற பெயர் வாங்க முடியாது.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் தனது படங்கள் ரிலீஸ் ஆக வேண்டும் என்று எதிர் பார்த்தால் நல்ல படங்கள் அமையாது. இவ்வாறு இலியானா கூறினார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts