background img

புதிய வரவு

விருது படங்களில் நடிக்க அலையவில்லை; நடிகைகள் குறிக்கோள் பணம் சம்பாதிப்பதே -பிரியாமணி

“பருத்தி வீரன்” படம் மூலம் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றவர் பிரியாமணி. தெலுங்கிலும் முன்னணி நடிகையாக உள்ளார்.

ஐதராபாத்தில் பிரியாமணி அளித்த பேட்டி வருமாறு:-

நான் எந்த வேடம் கொடுத்தாலும் நடிக்க தயாராக இருக்கிறேன். படப்பிடிப்பு செட்டுக்குள் நுழையும்போது டைரக்டர் என்ன சொல்லி தாராரோ அதன்படி நடிக்க ஆரம்பித்து விடுவேன். கதைக்கு தேவையானால் கவர்ச்சியாகவும் நடிப்பேன். அதற்காக அதிகம் ஆடை குறைப்பு செய்ய மாட்டேன். பருத்தி வீரன் படத்தில் தேசிய விருது கிடைத்தது. தொடர்ந்து அதுபோன்ற கேரக்டர்களில் நடிக்க எனக்கு ஆர்வம் இல்லை.

தேசிய விருது எப்போதும் வராது. விருக்காக நான் அலையவும் இல்லை. எப்போதாவது அதுமாதிரி வேடங்களில் நடிப்பை வெளிப்படுத்துவேன். நடிக்கவும் திறமை வேண்டும். கவர்ச்சிக்கும் சம்மதிக்க வேண்டும். அப்போதுதான் சினிமாவில் நிலைத்து நிற்க முடியும். இல்லையேல் ஓரம் கட்டி விடுகிறார்கள். நடிகைகள் யாரும் கலைச்சேவைக்கு வரவில்லை. பணம் சம்பாதிப்பதுதான் அவர்கள் குறிக்கோள். ராவணன், ரத்தசரித்திரம் படங்கள் மூலம் இந்தி திரைஉலகில் பிரபலமாகி உள்ளேன்.

இந்தியில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்றெல்லாம் எனக்கு விருப்பம் இல்லை. இருநாயகிகள் கதைகளிலும் நடிக்க தயார். ஏற்கனவே அனுஷ்கா, விமலாராமன் போன்றவருடன் இணைந்து நடித்துள்ளேன். சினிமாவில் என் எதிர்காலம் சிறப்பாக இருக்கிறது. அருந்ததி, அனுஷ்கா மாதிரி ஒரு கேரக்டர் வந்து இருக்கிறது. அதில் நடிப்பதற்காக கத்திச் சண்டை கற்று வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts