திருவனந்தபுரம்:கேரள சட்டசபை தேர்தலில், 92 வயது கவுரியம்மா 17வது முறையாக போட்டியிடுகிறார். இவர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றாலும், ஆச்சர்யம் இல்லை.முதுமையிலும் அரசியல் களத்தை விடாத கவுரியம்மாவின் அரசியல் வாழ்க்கை 1948ல் துவங்கியது. அந்த ஆண்டில் திருவாங்கூர் - கொச்சி சட்டசபை கவுன்சில் தேர்தலில் போட்டியிட்டு, தோல்வியை தழுவினார். இதன் பின்னர் 1952 மற்றும் 1954ல் திருவாங்கூர் சட்டசபை கவுன்சில் உறுப்பினராக இருமுறை தேர்வு செய்யப்பட்டார். இதன் பின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில், கவுரியம்மா சேர்ந்தார். இக்கட்சி ஆட்சிக்கு வந்த 1957ல் வருவாய் துறை அமைச்சராக இருந்தார். அப்போது, இதே கட்சியை சேர்ந்த டி.வி.தாமஸ் என்பவரை, திருமணம் செய்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உடைந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1964ல் உதயமானது.இக்கட்சியில் கவுரியம்மா இணைந்தார். கணவர் தாமஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் நீடித்தார்.
மார்க்சிஸ்ட் ஆட்சியில் 1967, 1980, 1987 ஆகிய ஆண்டுகளிலும், காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில், 2001 முதல் 2006 வரையும், அமைச்சராக இருந்தார். 1994ல் உள்கட்சி பூசலால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து, கவுரியம்மா வெளியேற்றப்பட்டார். இதன் பின், ஜனாதிபத்திய சம்ரக்ஷணா சமிதி என்ற பெயரில், கட்சி துவக்கினார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சியுடன் இணைந்து, 2001ல் போட்டியிட்டு அமைச்சரானார்.தற்போது நடக்க உள்ள சட்டசபை தேர்தலில், 17வது முறையாக ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சியுடன் இணைந்து, சேர்தலா தொகுதியில் போட்டியிடுகிறார்.

0 comments :
Post a Comment