background img

புதிய வரவு

இந்தியாவுக்கு உலக கோப்பை வாய்ப்பு *தோனிக்கு சாதகமான கிரகங்கள்

மும்பை: தோனிக்கு சாதகமாக கிரகங்களின் அமைப்பு இருப்பதால், இம்முறை இந்திய அணி உலக கோப்பை வெல்ல வாய்ப்பு இருப்பதாக, ஜோதிடரின் கணிப்பு தெரிவிக்கிறது.
உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டிகள் முடிந்து, காலிறுதி போட்டிகள் நாளை முதல் துவங்குகின்றன. மார்ச் 24ம் தேதி நடக்கும் இரண்டாவது காலிறுதியில் இந்திய அணி, "நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது.
தோனி "1981':
இந்தச் சூழலில் இந்தியா தான் கோப்பை வெல்லும் என மும்பை ஜோதிடர் ஒருவர் கணித்துள்ளார். இதற்கு கேப்டன் தோனியின் பிறந்த ஆண்டு பலமாக இருப்பது தான் காரணம். இவர் 1981ல் பிறந்துள்ளார். இதே ஆண்டில் பிறந்த ஸ்பெயின் கால்பந்து அணியின் கேப்டன் கேசில்லாஸ், 2010ல் உலக கோப்பையை வென்றார். தற்போது பாலிவுட்டில் பிரபலமாக உள்ள ஷாகித் கபூர் 1981, ரன்பீர் கபூர் 1982ல் பிறந்தவர்கள் தான். அதாவது அனைத்து துறையிலும் 1981ல் பிறந்தவர்கள் தான் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
கடந்த 1974ல் பிறந்த ஆஸ்திரேலியாவின் பாண்டிங், ஏற்கனவே இரண்டு முறை கோப்பை வென்று விட்டார். இதனால் இத்தொடரில் 1981ல் பிறந்த இந்திய அணி கேப்டன் தோனி, தென் ஆப்ரிக்க கேப்டன் ஸ்மித் ஆகியோரில் ஒருவருக்கு கோப்பை வெல்லும் வாய்ப்புள்ளது.
மற்றவர்கள் எப்படி:
சூரியன், செவ்வாய் கிரகங்களின் ஆதிக்கம் நிறைந்த இலங்கை கேப்டன் சங்ககராவுக்கு (1977), இம்முறை உலக கோப்பை கிடைக்காது. இங்கிலாந்தின் ஸ்டிராசிற்கு (1977), ஆஷஸ் வெற்றியுடன் எல்லாம் முடிந்து விட்டது. இதனால் தான் அடுத்து வந்த ஒருநாள் தொடரில் மோசமாக தோற்றது. பாகிஸ்தான் கேப்டன் அப்ரிதி (1980) சிறப்பாக செயல்பட்டாலும், இவர் இம்ரான் கான் ஆகமுடியாது. வெட்டோரி (1979), சமிக்கும் (1983) கிரகபலன்கள், அவ்வளவு அனுகூலமாக இல்லையாம்.
கிளார்க் வந்தால்...:
கடந்த 2006 உலக கோப்பை கால்பந்து சாம்பியன் பட்டம் வென்ற, இத்தாலி கேப்டன் கன்னவரோ பிறந்த ஆண்டு 1973. ஆஸ்திரேலிய அணி பார்ப்பதற்கு வலிமையாக இருந்தாலும், பாண்டிங்கிற்கு மீண்டும் கோப்பை வெல்லும் அதிர்ஷ்டம் இல்லை. ஒருவேளை காயம் காரணமாக பாண்டிங் விலகி, 1981ல் பிறந்த மைக்கேல் கிளார்க் கேப்டன் பதவியேற்றால் மீண்டும் கோப்பை வெல்ல வாய்ப்பு ஏற்படும்.
இந்தியாவுக்கு வாய்ப்பு:
தற்போதுள்ள இந்திய அணி, "நாக் அவுட்' சுற்றில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்த காத்திருக்கிறது. அரையிறுதியில் பாகிஸ்தானை சந்திக்க நேர்ந்தாலும், மீண்டும் வெற்றி பெறுவது உறுதி.
கிரகங்களில் வலிமையானதாக உள்ள புளூட்டோ தான், 1983ல் கபில் தேவுக்கு சாதகமாக இருந்து, யாரும் எதிர்பார்க்காத வகையில் கோப்பை வெல்லச் செய்தது. தற்போது இதே பலன்கள் தோனிக்கு ஊக்கமாக அமைவதால், ஆஸ்திரேலியாவின் வெற்றி நடைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts