டெல்லி: தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார் நடிகர் சிரஞ்சீவி.
பிரஜா ராஜ்யம் எனும் பெயரில் தனிக் கட்சி கண்ட சிரஞ்சீவி, தொடர்ந்து அக்கட்சியை நடத்த முடியாமல், காங்கிரஸில் இணைவதாக அறிவித்தார். விரைவில் அக்கட்சியின் இணைப்பு விழா பிரமாண்ட முறையில் சோனியா காந்தி முன்னிலையில் நடக்க உள்ளது.
இந்த இணைப்பு விழா குறித்து டெல்லியில் தமிழகத்துக்கான காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் குலாம் நபி ஆசாத்தை சிரஞ்சீவி திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழகம் மற்றும் புதுவையில் சிரஞ்சீவி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. சிரஞ்சீவிக்கு தமிழகத்திலும் குறிப்பிட்ட அளவு ரசிகர்கள் உள்ளதால், அவரது பிரச்சாரம் நல்ல பலனைத் தரும் என அவரிடம் கூறப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிரஞ்சீவி, "தமிழகத்தில் நான்கு நாட்கள் திமுக - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுவேன். குறிப்பாக காங்கிரஸ் வேட்பாளர்கள் நிற்கும் தொகுதிகளில் பிரச்சாரம் செய்யவிக்கிறேன். புதுச்சேரிக்கு பிரச்சாரம் செய்யப் போவது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை," என்றார்.

0 comments :
Post a Comment