background img

புதிய வரவு

இளவரசர் வில்லியம் திருமணத்துக்கு குதிரை வண்டி மற்றும் கார் ஏற்பாடு

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், டயானா தம்பதியின் மூத்த மகன் வில்லியம். இவருக்கு வருகிற ஏப்ரல் 29-ந்தேதி லண்டனில் திருமணம் நடைபெற உள்ளது. இவர் தனது நீண்ட நாள் காதலி கேத் மிடில் டன்னை மணக்கிறார். திருமணத்துக்கு இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் நிச்சயம் அழைக்கப்படுவார் என தெரிகிறது.

அதே நேரம் அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் உலக தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட மாட்டாது. ஏனெனில் இளவரசர் வில்லியம் பட்டத்து அரசர் இல்லை. அவரது தந்தை சார்லசுக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் தான் உள்ளார். இங்கிலாந்து கால்பந்து வீரர்கள் டேவிட், மற்றும் பெக்காம் ஆகியோர் திருமணத்துக்கு அழைக்கப்பட உள்ளனர்.

மேலும் வில்லியம் தனது முன்னாள் காதலிகள் ஜெகா கிரேக், ஒலிவியா ஹன்ட் ஆகியோருக்கு திருமண அழைப்பு அனுப்பியுள்ளார். அதே போன்று கேத் மிடில் டன் தனது முன்னாள் காதலரை தனது திருமணத்துக்கு அழைத்துள்ளார். திருமணத்துக்கு இன்னும் 1 மாதங்களே உள்ளன. எனவே, திருமண அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

இளவரசர் வில்லியமின் பாட்டி ராணி எலிசபெத் திருமணத்துக்கு அழைப்பது போன்று பத்திரிகை தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், அழைப்பிதழ் அனுப்பப்படுவோரின் பட்டியலும் தயாரிக்கப்பட்டுள்ளது. அநேகமாக 1900 பேர் முதல் 2 ஆயிரம் பேருக்கு அழைப்பு அனுப்பப்படலாம் என தெரிகிறது.

ஆனால் அவர்களின் பட்டியல் வெளியிடப்படவில்லை. இளவரசர் வில்லியம் திருமணத்துக்கு குதிரை வண்டி மற்றும் கார் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது கேத் மிடில் திருமணம் நடக்கும் சர்ச் வேச்த்மின்ச்ட்டர் அப்பேக்கு 1977 ரோல்ஸ் -ராயல்ஸ்சில் வருகின்றார் பின்னர் சர்ச் லிருந்து இளவரசர் வில்லியம் - கேத் மிடில் வேச்த்மின்ச்ட்டர் அப்பே டு புச்கின்காம் பேலஸ்க்கு 5 குதிரை வண்டிகள் தொடர புச்கின்காம் பேலஸ் செல்கின்றனர்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts