background img

புதிய வரவு

மருத்துவ சிகிச்சைக்கு வரி ரத்து?

புதுடில்லி:""பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள வரி அறிவிப்புகளில், மருத்துவ சேவைக்கான சேவை வரி உட்பட சில வரி அம்சங்கள் பற்றி மறுபரிசீலனை மற்றும் மீனவர்கள் நலனுக்கு மானியம், கல்வி, சுகாதாரத் துறைக்கு சில சலுகைகள் அளிக்கப்படும்,'' என, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று சூசகமாக தெரிவித்தார்.
தமிழகம், மேற்கு வங்கம் உட்பட ஐந்து மாநில சட்டசபைகளுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதன் காரணமாக, பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிக்க கட்சிகள் கோரிக்கை விடுத்தனஇதையடுத்து, வரும் 25ம் தேதி கூட்டத்தொடர் முடிகிறது. இதில் முக்கிய விஷயங்கள் விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்படுகிறது. முக்கியமாக எதிர்பார்க்கப்படும் மசோதாக்கள் பட்ஜெட் தொடர்பாக இரண்டாம் கட்ட தொடரில் எடுத்து கொள்ளப்படுகிறது. லோக்சபாவில் நேற்று பட்ஜெட் குறித்த பொது விவாதம் சுருக்கமாக முடிந்ததும், பிரணாப் பதிலளித்து பேசினார்.
இதன் பின் நடப்பாண்டிற்கான செலவினங்கள் தொடர்பான துணை மானிய கோரிக்கைக்கு சபை ஒப்புதல் அளித்தது. இதன் மூலம், பொது பட்ஜெட் அம்சங்களில் ஒப்புதல் பெறுவதில் முதல் கட்டத்தை அரசு தாண்டியுள்ளது.கச்சா எண்ணெய் விலை உயர்வால் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடுகட்ட மானியம், உரமானியம் அளித்ததால் ஏற்பட்டுள்ள கூடுதல் செலவினங்களுக்காக 79 ஆயிரத்து 590 கோடி ரூபாய் ஒதுக்கீடு, பார்லிமென்ட் ஒப்புதலை கடந்த வாரம் அரசு கோரியது.மானிய கோரிக்கைகள் மற்றும் நிதி மசோதா உட்பட பட்ஜெட் அம்சங்கள் குறித்து இம்மாதம் 24ம் தேதி எடுத்து கொள்ளப்பட உள்ளது. கிராமப்புற வளர்ச்சி, வெளியுறவுத் துறை, சுரங்கத் துறை, சாலை போக்குவரத்து ஆகிய அமைச்சகங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து அடுத்த வாரம் லோக்சபாவில் விவாதிக்கப்பட உள்ளது.
நேற்று பட்ஜெட் விவாதத்திற்கு பதிலளித்து பேசிய பிரணாப் குறிப்பிடுகையில், "மருத்துவ சிகிச்சைக்கு 5 சதவீத சேவை வரி விதிப்பு உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து சபையில் தெரிவிக்கப்பட்ட ஆலோசனைகள் பற்றி பரிசீலிக்கப்படும்.இது தொடர்பாக நிதி மசோதா தொடர்பான விவாதத்தின் போது, பதிலளிப்பதாக குறிப்பிட்டார். நிதியமைச்சர் பதிலுரைக்கு பின் துணை மானியக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts