background img

புதிய வரவு

எம்.ஜி.ஆருக்காக எழுந்து நின்ற கருணாநிதி!

"கருவாடு மீனாகாது; கறந்த பால் மடிபுகாது' என்பது போன்ற சொற்றொடர்களை, தன் பேச்சில் எழுப்பி, அனைவரையும் ஈர்த்தவர், மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்து. எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய மூவரிடமும் நெருங்கிப் பழகிய அனுபவமுள்ள அவர், ஒரு கட்டுரையில் எழுதியது:எம்.ஜி.ஆருக்கு மக்கள் செல்வாக்கு இருப்பதை, கருணாநிதி விரும்பவில்லை. இதனால், எம்.ஜி.ஆ.ரை மட்டம் தட்டும் விதமாக, எப்போது வேண்டுமானாலும் தொல்லை தரலாம்; தட்டிக் கேட்கலாம் என்ற தவறான கண்ணோட்டத்தை கருணாநிதி ஏற்படுத்திக் கொண்டார். இதற்காகவே, தன் மகன் மு.க.முத்துவை சினிமாவில் நடிக்க வைத்தார். முதல் படமே கலர் படம்.
இது மட்டுமில்லாமல், மாவட்டச் செயலர்களை வைத்து எம்.ஜி.ஆர்., மன்றங்களை கலைக்க முயற்சித்தார். அ.தி.மு.க., உருவாக முக்கிய காரணமாக அமைந்தது இது.இவ்வளவுக்கும் பிறகு, கருணாநிதியை தலைவருக்குரிய மரியாதையுடன் தான் எம்.ஜி.ஆர்., பார்த்தார். ஒரு முறை தலைமைச் செயலகத்தில் முதல்வர் கருணாநிதியைப் பார்க்க எம்.ஜி.ஆர்., சென்றார். அப்போது கருணாநிதி எழுந்து நின்று அவரை வரவேற்றார்.பேசிவிட்டு புறப்படும் போது, "ஒரு சின்ன வேண்டுகோள். நான் வரும் போது, நீங்கள் உட்கார்ந்து இருந்தால் போதும். நமக்குள்ளே எவ்வளவு பழக்கம் இருந்தாலும், இப்ப நீங்க முதல்வர்; நான் தொண்டன். நான் வரும் போது, நீங்கள் எழுந்து நிற்கிறதை மத்தவங்க பார்த்தால், தப்பா நினைப்பாங்க' என்று சொன்னார் எம்.ஜி.ஆர்.,

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts