background img

புதிய வரவு

நடிகை அனுஷ்கா வீட்டில் சோதனை

அனுஷ்கா உள்பட பல்வேறு தெலுங்கு நடிகர், நடிகைகள் வீடுகள்,அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் புதன்கிழமை சோதனை நடத்தியுள்ளனர். அப்போது ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து வருமான வரித்துறை உயரதிகாரி,

’’ நடிகர் ரவிதேஜா, நடிகை அனுஷ்கா ஆகியோரின் வீடுகள், அலுவலகங்களிலும்,நாகார்ஜுனாவுக்கு சொந்தமான அன்னப்பூர்ணா ஸ்டுடியோ, தயாரிப்பாளர் சிவபிரசாத் ரெட்டியின் வீட்டிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது’’ என்று தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத் நகருக்கு அடுத்த பெரிய நகரமான விசாகப்பட்டிணத்தில் தெலுங்கு திரைப்படத்துறையை சேர்ந்த நடிகர், நடிகைகள் ஏராளமான அளவில் நிலம் வாங்கி வருவது தொடர்பாக கிடைத்த தகவலின் பேரிலேயே இந்த சோதனை நடைபெற்றதாக தெலுங்கு திரைப்பட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts