தி.மு.க., கூட்டணியில், காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட, 63 தொகுதிகளில், 60 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள், டில்லியில் நேற்று மாலை அறிவிக்கப்பட்டனர். தமிழக காங்கிரஸ் கோஷ்டித் தலைவர்கள் சண்டை காரணமாக, பழைய முகங்களுக்கே மீண்டும், "டிக்கெட்' தரவேண்டிய நிலை ஏற்பட்டதால், சோனியா கடும் விரக்தி அடைந்துள்ளார்.
தமிழக காங்கிரசில் தற்போது, "சிட்டிங்' எம்.எல்.ஏ.,க்கள் 34 பேருடன், வேறு கட்சிகளிலிருந்து காங்கிரசில் இணைந்த எம்.எல்.ஏ.,க்களான நடிகர் எஸ்.வி.சேகர், செல்வப்பெருந்தகை ஆகியோரையும் சேர்த்து மொத்தம், 36 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இவர்களில் ராணி வெங்கடேசன், ராமன், அசன் அலி, எஸ்.வி.சேகர் ஆகியோருக்கு, "சீட்' கொடுக்கப்படவில்லை. மீதமுள்ள, 32 எம்.எல்.ஏ.,க் களுக்கும் மீண்டும் போட்டியிட, "சீட்' வழங்கப்பட்டுள்ளது. மேலும், வேட்பாளர்கள் பட்டியலில் வாசன் கை ஓங்கியுள்ளது. "சிட்டிங்' எம்.எல்.ஏ.,க்களில் 18 பேர், அவரது அணியில் இருந்தனர். இவர்களில் பீட்டர் அல்போன்ஸ், ஞானசேகரன், கோவைத் தங்கம், விடியல் சேகர் உட்பட, 16 எம்.எல்.ஏ.,க்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இளைஞர் காங்கிரஸ் வேட்பாளர்கள் யுவராஜா, பெருமாள்சாமி உட்பட, அவரது அணியைச் சேர்ந்த மேலும் 12 பேருக்கும், "சீட்' கிடைத்துள்ளது. சிதம்பரம் அணியில், சுப்புராம், எம்.என்.கந்தசாமி, செல்வப் பெருந்தகை, கே.ஆர்.ராமசாமி என, நான்கு, "சிட்டிங்' எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இவர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சிங்காநல்லூர் மயூரா ஜெயக்குமார், இளைஞர் காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் மதுரை தெற்கு வரதராஜன் உட்பட, அவரது அணியைச் சேர்ந்த மேலும், 10 பேருக்கும், "சீட்' கிடைத்துள்ளது.
தங்கபாலு அணியில், அவரது மனைவி ஜெயந்தி (மயிலாப்பூர்), திருத்தணி சதா சிவலிங்கம், ஆவடி தாமோதரன் உட்பட, 11 பேருக்கும், முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் அணியில், பழனிச்சாமி, சிறுபான்மை பிரிவு கோட்டாவில் கிருஷ்ணகிரி ஹசீனா சையத், இளைஞர் காங்கிரஸ் கோட்டாவில் அண்ணாநகர் அறிவழகன் உட்பட, ஆறு பேருக்கும், முன்னாள் மத்திய அமைச்சர் பிரபுவின் ஆதரவாளர், ஊட்டி கணேஷ், மணிசங்கர் அய்யரின் ஆதரவாளர் மயிலாடுதுறை ராஜ்குமார் ஆகியோருக்கும், "சீட்' கொடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர, மாணிக்தாகூர் எம்.பி., அணியில், நவீன் (விருதுநகர்), மகேந்திரன் (பேராவூரணி) ஆகியோருக்கும், "சீட்' தரப்பட்டுள்ளது. டில்லி மேலிட தலைவர்கள் கோட்டாவில், யசோதா (ஸ்ரீபெரும்புதூர்), வசந்தகுமார் (நாங்குநேரி), செல்லக்குமார் (தியாகராயநகர்), அருள்அன்பரசு (சோளிங்கர்) ஆகியோர், "சீட்' வாங்கியுள்ளனர். மூன்று முறை எம்.எல்.ஏ.,க்களாக உள்ள பழைய முகங்களுக்கே சீட் ஒதுக்கப்பட்டதால், கட்சியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் தொகுதிக்கு, "சிட்டிங்' எம்.எல்.ஏ., அசன் அலி, ராமவன்னி, தங்கபாலு ஆதரவாளரும் சிறுபான்மை பிரிவு மாநிலத் தலைவருமான முகமது அம்சா ஆகியோரிடையே போட்டி ஏற்பட்டுள்ளது. அதனால், இந்தத் தொகுதிக்கான வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஒட்டு மொத்தத்தில், கோஷ்டித் தலைவர்கள் சண்டை காரணமாக, பழைய முகங்களுக்கே மீண்டும், "டிக்கெட்' தரவேண்டிய நிலை ஏற்பட்டதால், சோனியா கடும் விரக்தி அடைந்துள்ளார்.

0 comments :
Post a Comment