பெங்களூரு: உலக கோப்பை பரபரப்பான லீக் போட்டியில் இந்திய அணி, அயர்லாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஐந்து விக்கெட் மற்றும் அரைசதம் விளாசி, "ஆல்-ரவுண்டராக' அசத்திய யுவராஜ், அணியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தார்.
இந்திய துணைக் கண்டத்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நேற்று பெங்களூருவில் நடந்த "பி' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதின. இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. அயர்லாந்து அணியில் கேரி வில்சன் நீக்கப்பட்டு, ஆன்ட்ரூ ஒயிட் வாய்ப்பு பெற்றார். "டாஸ்' வென்ற இந்திய கேப்டன் தோனி சற்று வித்தியாசமாக "பீல்டிங்' தேர்வு செய்தார்.
ஜாகிர் அபாரம்:
அயர்லாந்துக்கு முதல் ஓவரிலேயே "ஷாக்' கொடுத்தார் ஜாகிர். இவரது வேகத்தில் ஸ்டர்லிங் "டக்' அவுட்டானார். தனது அடுத்த ஓவரில் ஜாய்சை(4) வெளியேற்றினார் ஜாகிர். பின் போர்டர்பீல்டு, நியால் ஓ பிரையன் இணைந்து பொறுப்பாக ஆடினர். சொதப்பலாக பந்துவீசிய பியுஸ் சாவ்லா சுழலில் ஒரு "சூப்பர்' சிக்சர் அடித்தார் போர்டர்பீல்டு. இந்த நேரத்தில் விராத் கோஹ்லியின் துல்லிய "த்ரோவில்' நியால் ஓ' பிரையன்(46) பரிதாபமாக ரன் அவுட்டானார்.
யுவராஜ் மிரட்டல்:
இதற்கு பின் யுவராஜ் சுழலில் மிரட்டினார். இவரது வலையில் முதலில் ஆன்ட்ரூ ஒயிட்(5) சிக்கினார். அடுத்து கெவின் ஓ' பிரையனின்(9)முக்கிய விக்கெட்டை கைப்பற்றி, பெங்களூரு ரசிகர்களின் கரகோஷத்தை பெற்றார். தொடர்ந்து கேப்டன் போர்டர்பீல்டையும்(75) வெளியேற்றினார். கடந்த போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக அசத்திய மூனே(5), கியுசக்கை(24) அவுட்டாக்கிய யுவராஜ், 5 விக்கெட் வீழ்த்தினார். "டெயிலெண்டர்கள்' ஏமாற்றிய நிலையில், அயர்லாந்து அணி 47.5 ஓவரில் 207 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
திணறல் துவக்கம்:
சுலப இலக்கை விரட்டிய இந்திய அணி, துவக்கத்தில் திணறியது. ரான்கின் வீசிய முதல் ஓவரில் சேவக், சச்சின் தலா ஒரு பவுண்டரி அடித்தனர். ஜான்ஸ்டன் வீசிய அடுத்த ஓவரில் சேவக்(5), அவரிடமே "கேட்ச்' கொடுத்து வெளியேறினார். இம்மகிழ்ச்சியில் ஜான்ஸ்டன் தனது வழக்கமான "சிக்கன் நடனம்' ஆட, இந்திய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மீண்டும் பந்துவீச வந்த ஜான்ஸ்டன், காம்பிரை(10) அவுட்டாக்கினார். பின் சச்சின், விராத் கோஹ்லி இணைந்து விவேகமாக ஆடினர். இந்த நேரத்தில் 18 வயது இளம் வீரரான டாக்ரெல் சுழலில் சச்சின்(38) நடையை கட்டினார். அடுத்து, விராத் கோஹ்லி(34) வீணாக ரன் அவுட்டானார். இப்படி "டாப்-ஆர்டர்' சரிய, இந்தியா 4 விக்கெட்டுக்கு 100 ரன்கள் எடுத்து திணறியது.
யூசுப் அதிரடி:
இதற்கு பின் கேப்டன் தோனி, யுவராஜ் சேர்ந்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். டாக்ரெல் வீசிய போட்டியின் 41வது ஓவரில் தோனி(34) அவுட்டாக, லேசான பதட்டம் ஏற்பட்டது. அடுத்து வந்த யூசுப் பதான் இதே ஓவரில் இரண்டு இமாலய சிக்சர்கள், ஒரு பவுண்டரி அடிக்க, பதட்டம் தணிந்து, மகிழ்ச்சி பிறந்தது. தனது வாணவேடிக்கையை தொடர்ந்த பதான், ஸ்டர்லிங் வீசிய பந்தையும் சிக்சருக்கு பறக்க விட்டார். மூனே பந்தை ஒரு ரன்னுக்கு தட்டி விட்ட யுவராஜ், ஒரு நாள் போட்டிகளில் தனது 47வது அரைசதத்தை எட்டினார். மூனேயின் அடுத்த பந்தை யூசுப் பதான் பவுண்டரிக்கு அனுப்ப, இந்திய அணி 46 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 210 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. யுவராஜ் 50(3 பவுண்டரி), யூசுப் பதான் 30( 2 பவுண்டரி, 3 சிக்சர்) ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தனர்.
ஆட்ட நாயகன் விருதை யுவராஜ் தட்டிச் சென்றார்.
5 விக்., + 50 ரன் சாதனை
நேற்று பந்துவீச்சில் அசத்திய யுவராஜ் 5 விக்கெட் வீழ்த்தினார். பின் பேட்டிங்கிலும் கலக்கிய இவர் 50 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் இவர் அரைசதம் அடித்தால், இந்தியா வெற்றி பெறும் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமானது. தவிர, உலக கோப்பை வரலாற்றில், ஒரே போட்டியில் 5 விக்கெட் மற்றும் 50 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையும் படைத்தார்.
--------------------
100 "சிக்சர்'
பியுஸ் சாவ்லா சுழலில் அயர்லாந்து கேப்டன் போர்ட்டர்பீல்டு ஒரு இமாலய சிக்சர் அடித்தார். இது, இந்த உலக கோப்பை தொடரின் 100வது சிக்சராக அமைந்தது. இம்முறை முதல் சிக்சரை, வங்கதேச வீரர் அப்துர் ரசாக் பந்தில் இந்தியாவின் சேவக் விளாசினார்.
யுவராஜ் "உலக' சாதனை!
அயர்லாந்துக்கு எதிராக அபாரமாக பந்துவீசிய இந்திய வீரர் யுவராஜ் சிங் 31 ரன் மட்டும் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் உலக கோப்பை வரலாற்றில் இடது கை சுழற்பந்துவீச்சாளராக, மிகச் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்து, சாதனை படைத்தார்.
பெங்களூருவில் நடந்த "பி' பிரிவு உலக கோப்பை லீக் போட்டியில் இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதின. கடந்த போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி அதிர்ச்சி அளித்த அயர்லாந்துக்கு, இம்முறை யுவராஜ் சிங் வேட்டு வைத்தார். சுழலில் மிரட்டிய இவர் வரிசையாக விக்கெட்டுகளை கைப்பற்றினார். பிரதான சுழற்பந்துவீச்சாளர்களான ஹர்பஜன், பியுஸ் சாவ்லா சொதப்பிய நிலையில், "பார்ட் டைம்' பவுலரான யுவராஜ் பட்டையை கிளப்பினார். முதலில் ஆன்ட்ரூ ஒயிட்டை வெளியேற்றினார். பின் "ஆபத்தான' கெவின் ஓ' பிரையனை அவுட்டாக்கி திருப்புமுனை ஏற்படுத்தினார். கடந்த போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக 50 பந்துகளில் 100 ரன்கள் எடுத்த கெவின், உலக கோப்பை அரங்கில் அதிவேக சதம் அடித்தார். இம்முறை இவர் யுவராஜ் பந்தில் அவரிடமே "கேட்ச்' கொடுத்து வெறும் 9 ரன்களுக்கு நடையை கட்ட, இந்திய ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர். அயர்லாந்து சார்பில் அதிபட்சமாக 75 ரன்கள் எடுத்த அந்த அணியின் கேப்டன் போர்ட்டர்பீல்டும், யுவராஜ் வலையில் சிக்கினார். தொடர்ந்து மூனே, "அதிரடி' கியுசக்கை வெளியேற்றிய இவர், உலக கோப்பை அரங்கில் முதல் முறையாக 5 விக்கெட் கைப்பற்றினார்.
இம்முறை பாகிஸ்தான் கேப்டன் அப்ரிதி அனைத்து போட்டிகளிலும் விக்கெட் வேட்டை நடத்தி வருகிறார். இதே போல யுவராஜும் சாதித்து வருகிறார். இவர் பேட்டிங்கிலும் அதிரடி காட்டினால், இந்திய அணியின் கோப்பை கனவு நிச்சம் நனவாகும்.
ஸ்கோர் போர்டு
அயர்லாந்து
போர்டர்பீல்டு(கே)ஹர்பஜன்(ப)யுவராஜ் 75(104)
ஸ்டர்லிங்(ப)ஜாகிர் 0(1)
ஜாய்ஸ்(கே)தோனி(ப)ஜாகிர் 4(5)
நெய்ல் -ரன்அவுட்-(கோஹ்லி/தோனி) 46(78)
ஒயிட்(கே)தோனி(ப)யுவராஜ் 5(10)
கெவின் (கே)+(ப)யுவராஜ் 9(13)
கியுசக் எல்.பி.டபிள்யு.,(ப)யுவராஜ் 24(30)
மூனே எல்.பி.டபிள்யு.,(ப)யுவராஜ் 5(17)
ஜான்ஸ்டன் எல்.பி.டபிள்யு.,(ப)முனாப் 17(20)
டாக்ரெல்(கே)தோனி(ப)ஜாகிர் 3(10)
ரான்கின்-அவுட் இல்லை- 1(1)
உதிரிகள் 18
மொத்தம் (47.5 ஓவரில், "ஆல்-அவுட்') 207
விக்கெட் வீழ்ச்சி: 1-1(ஸ்டர்லிங்), 2-9(ஜாய்ஸ்), 3-122(நெய்ல்), 4-129(ஆன்ட்ரூ ஒயிட்), 5-147(கெவின்), 6-160(போர்டர்பீல்டு), 7-178(மூனே), 8-184(கியுசக்), 9-201(டாக்ரெல்), 10-207(ஜான்ஸ்டன்).
பந்துவீச்சு: ஜாகிர்கான் 9-1-30-3, முனாப் 4.5-0-25-1, யூசுப் 7-1-32-0, ஹர்பஜன் 9-1-29-0, பியுஸ் சாவ்லா 8-0-56-0, யுவராஜ் 10-0-31-5.
இந்தியா
சேவக்(கே)+(ப)ஜான்ஸ்டன் 5(3)
சச்சின்-எல்.பி.டபிள்யு.,(ப)டாக்ரெல் 38(56)
காம்பிர்(கே)கியுசக்(ப)ஜான்ஸ்டன் 10(15)
கோஹ்லி-ரன்அவுட்-(டாக்ரெல்/கெவின்) 34(53)
யுவராஜ் -அவுட்இல்லை- 50(75)
தோனி--எல்.பி.டபிள்யு.,(ப)டாக்ரெல் 34(50)
யூசுப் -அவுட்இல்லை- 30(24)
உதிரிகள் 9
மொத்தம் (46 ஓவரில், 5விக்.,) 210
விக்கெட் வீழ்ச்சி: 1-9(சேவக்), 2-24(காம்பிர்), 3-87(சச்சின்), 4-100(கோஹ்லி), 5-167(தோனி).
பந்துவீச்சு: ஜான்ஸ்டன் 5-1-16-2, டாக்ரெல் 10-0-49-2 , ரான்கின் 10-1-34-0, மூனே 2-0-18-0, ஸ்டர்லிங் 10-0-45-0, கெவின் 1-0-3-0, ஒயிட் 5-0-23-0, கியுசக் 3-0-18-0.

0 comments :
Post a Comment