background img

புதிய வரவு

இங்கிலாந்து "திரில்' வெற்றி! *தென் ஆப்ரிக்கா பரிதாபம்

சென்னை: சென்னையில் நடந்த உலக கோப்பை லீக் போட்டியில், இங்கிலாந்து அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் "திரில்' வெற்றி பெற்றது. தென் ஆப்ரிக்க அணியின் போராட்டம் வீணானது.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா, இலங்கை, வங்கதேச நாடுகளில் நடக்கிறது. இதில் இங்கிலாந்து, தென் ஆப்ரிக்க அணிகள் மோதிய "பி' பிரிவு லீக் போட்டி சென்னையில் நடந்தது. "டாஸ்' வென்ற இங்கிலாந்து கேப்டன் ஸ்டிராஸ், பேட்டிங் தேர்வு செய்தார். இங்கிலாந்து அணியில் கோலிங்வுட்டுக்குப் பதில் ரவி போபரா இடம் பெற்றார். தென் ஆப்ரிக்க அணியில் மாற்றம் எதுவுமில்லை.
பீட்டர்சன் "ஷாக்':
இங்கிலாந்து அணிக்கு கேப்டன் ஸ்டிராஸ், கெவின் பீட்டர்சன் இணைந்து துவக்கம் கொடுத்தனர். வழக்கம் போல முதல் ஓவரிலேயே, சுழற்பந்து வீச்சை கையில் எடுத்தார் ஸ்மித். இதற்கு நல்ல பலன் கிடைத்தது. பீட்டர்சனின் மூன்றாவது பந்தில் ஸ்டிராஸ், "டக்' அவுட்டானார். கடைசி பந்தில் கெவின் பீட்டர்சனும் (2) அவுட்டானார்.
"ஆமை' ஜோடி:
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இயான் பெல்லும் 5 ரன்னுடன் நடையை கட்டினார். பின் டிராட், போபரா இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இவர்கள் ரன் எடுப்பதற்கு பதில், விக்கெட்டை பாதுகாப்பதில் கவனம் செலுத்த, ஸ்கோர் ஆமை வேகத்தில் உயர்ந்தது. ஒருநாள் போட்டி என்பதையே மறந்து விட்டு, டெஸ்ட் போல விளையாடினர்.
நான்காவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி, 151 பந்தில் 99 ரன்கள் சேர்த்த நிலையில், 9வது அரைசதம் அடித்த டிராட் (94 பந்தில் 52 ரன்), இம்ரான் தாகிர் சுழலில் சிக்கினார். பிரையர் (10), அரைசதம் அடித்த போபரா (98 பந்தில் 60 ரன்) இருவரும், மார்கலின் வேகத்தில் வீழ்ந்தனர்.
இம்ரான் எழுச்சி:
தொடர்ந்து சுழலில் மிரட்டினார் இம்ரான் தாகிர். இவரது வலையில் முதலில் யார்டி (3) திரும்பினார். சற்று தாக்குப்பிடித்த சுவானை (16) பெவிலியன் திருப்பி அனுப்பிய இவர், பிராட்டை "டக்' அவுட்டாக்கினார். இங்கிலாந்து அணி 45.4 ஓவரில் 171 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இம்ரான் தாகிர் 4, ராபின் பீட்டர்சன் 3 விக்கெட் வீழ்த்தினர்.
அபார துவக்கம்:
எளிய இலக்கை துரத்திய தென் ஆப்ரிக்க அணிக்கு கேப்டன் ஸ்மித், ஆம்லா இணைந்து சிறப்பான துவக்கம் தந்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 63 ரன்கள் சேர்த்த நிலையில் ஸ்மித் (22), சுவானின் சுழலில் வீழ்ந்தார். மறுமுனையில் ஆம்லா (42) அரைசத வாய்ப்பை இழந்தார். அனுபவ வீரர் காலிஸ் (15) நிலைக்கவில்லை.
விக்கெட் மடமட:
பின் டிவிலியர்ஸ், டு பிளசிஸ் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 3 விக்கெட்டுக்கு 124 ரன்கள் என்ற நிலையில், டிவிலியர்ஸ் (25), ஆண்டர்சன் வேகத்தில் போல்டானார். டு பிளசிஸ் (17) ரன் அவுட்டானார். இந்திய ஆடுகளங்கள் குறித்து நன்கு அறிந்த டுமினி, "டக்' அவுட்டாகி எதிர்பார்ப்பை வீணடித்தார்.
பீட்டர்சனும் (3) கைவிட, தென் ஆப்ரிக்க அணி 127 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
வெற்றிக்கு தேவை 45 ரன்கள், கைவசம் இருப்பது 3 விக்கெட்டுகள் என்ற நிலையில், வான் விக், ஸ்டைன் ஜோடி சேர்ந்தனர். இதில் ஸ்டைன் அவ்வப்போது பந்தை பவுண்டரிக்கு விரட்ட, போட்டியில் "டென்ஷன்' எகிறியது.
பிராட் அபாரம்:
கடைசி 23 பந்தில் 13 ரன்கள் தேவைப்பட்டன. இந்நிலையில் வான் விக் (13), பிரஸ்னன் பந்தில் போல்டானார். அடுத்து 18 பந்தில் 8 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், பிராட் பந்து வீச வந்தார். முதல் பந்தில் ஸ்டைனை(20) வெளியேற்றினார். 4வது பந்தில் மார்கலை (1), அவுட்டாக்க, தென் ஆப்ரிக்க அணி 47.4 ஓவரில் 165 ரன்களுக்கு சுருண்டது. இங்கிலாந்து அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் "திரில்' வெற்றி பெற்றது.
இங்கிலாந்து சார்பில் வேகத்தில் மிரட்டிய பிராட் 4, ஆண்டர்சன் 2 விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக போபரா தேர்வானார்.

5 ஓவரில் 3 ரன்கள், 4 விக்.,
நேற்று தென் ஆப்ரிக்க அணி "சேஸ்' செய்த போது 3 விக்கெட்டுக்கு 124 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்த 5 ஓவர்களில் 3 ரன்கள் மட்டும் எடுத்த நிலையில், டிவிலியர்ஸ், டு பிளசிஸ், டுமினி, பீட்டர்சன் என 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது தோல்விக்கு காரணமாக அமைந்தது.

ஸ்டிராஸ் மகிழ்ச்சி
தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான வெற்றி குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் ஸ்டிராஸ் கூறுகையில்,"" அயர்லாந்துக்கு எதிரான தோல்விக்கு அடுத்து, இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் எங்களுக்கு இருந்தது. இந்நிலையில் அனைத்து வீரர்களும் இணைந்து, போராட்ட குணத்தை வெளிப்படுத்தினர். முதல் பாதிக்கு பின், ஆடுகளம் மிகவும் மோசமடைந்து விட்டது. இதனால் பவுலிங் நன்றாக எடுபட்டது. இதை சுவான், பிராட், ஆண்டர்சன் சரியாக பயன்படுத்தினர்,'' என்றார்.

ஸ்கோர்போர்டு
இங்கிலாந்து
ஸ்டிராஸ்(கே)டிவிலியர்ஸ்(ப)பீட்டர்சன் 0(3)
கெவின் பீட்டர்சன்(கே)காலிஸ்(ப)பீட்டர்சன் 2(3)
டிராட்(கே)+(ப)இம்ரான் 52(94)
பெல்(கே)+(ப)பீட்டர்சன் 5(7)
போபரா-எல்.பி.டபிள்யு(ப)மார்கல் 60(98)
பிரையர்(கே)வான் விக்(ப)மார்கல் 10(19)
யார்டி(கே)பீட்டர்சன்(ப)இம்ரான் 3(17)
பிரஸ்னன்-எல்.பி.டபிள்யு(ப)ஸ்டைன் 1(4)
சுவான்(கே)டுமினி(ப)இம்ரான் 16(20)
பிராட்-எல்.பி.டபிள்யு(ப)இம்ரான் 0(3)
ஆண்டர்சன்-அவுட் இல்லை- 2(6)
உதிரிகள் 20
மொத்தம் (45.4 ஓவரில் ஆல் அவுட்) 171
விக்கெட் வீழ்ச்சி: 1-1(ஸ்டிராஸ்), 2-3(பீட்டர்சன்), 3-15(பெல்), 4-114(டிராட்), 5-134(பிரையர்), 6-148(போபரா), 7-149(பிரஸ்னன்), 8-161(யார்டி), 9-161(பிராட்), 10-171(சுவான்).
பந்துவீச்சு: பீட்டர்சன் 8-2-22-3, ஸ்டைன் 9-0-37-1, மார்கல் 7-0-16-2, காலிஸ் 4-1-14-0, இம்ரான் தாகிர் 8.4-1-38-4, டு பிளசிஸ் 5-0-16-0, டுமினி 4-0-20-0.
தென் ஆப்ரிக்கா
ஆம்லா(ப)பிராட் 42(51)
ஸ்மித்(கே)பிரையர்(ப)சுவான் 22(41)
காலிஸ்(கே)பிரையர்(ப)பிராட் 15(20)
டிவிலியர்ஸ்(ப)ஆண்டர்சன் 25(44)
டு பிளசிஸ்-ரன் அவுட்(பெல்/பிரையர்) 17(38)
டுமினி(ப)ஆண்டர்சன் 0(4)
வான் விக்(ப)பிரஸ்னன் 13(37)
பீட்டர்சன்(கே)பிரையர்(ப)யார்டி 3(16)
ஸ்டைன்-எல்.பி.டபிள்யு(ப)பிராட் 20(31)
மார்கல்(கே)பிரையர்(ப)பிராட் 1(3)
இம்ரான்-அவுட் இல்லை- 1(1)
உதிரிகள் 6
மொத்தம் (47.4 ஓவரில் ஆல் அவுட்) 165
விக்கெட் வீழ்ச்சி: 1-63(ஸ்மித்), 2-75(ஆம்லா), 3-82(காலிஸ்), 4-124(டிவிலியர்ஸ்), 5-124(டு பிளசிஸ்), 6-124(டுமினி), 7-127(பீட்டர்சன்), 8-160(வான் விக்), 9-164(ஸ்டைன்), 10-165(மார்கல்).
பந்து வீச்சு: யார்டி 9-1-46-1, ஆண்டர்சன் 6-0-16-2, பிரஸ்னன் 8-1-27-1, சுவான் 10-2-29-1, பிராட் 6.4-0-15-4, கெவின் பீட்டர்சன் 8-0-30-0.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts