background img

புதிய வரவு

காமாட்சி விரதம்

ஒரு சமயம் இறைவன் சிவபெருமான் தனிமையில் இருக்கும் பொழுது, அன்னை பார்வதி இறைவனின் கண்களை விளையாட்டாக பொத்தினாள்.அதன் விளைவால் உலகம் முழுவதும் இருள் சூழ்ந்து, உலகில் வாழும் ஜீவன்கள் மிகவும் துன்பத்திற்கு ஆளாகின.

அதனால் கோபம கொண்ட இறைவன், பார்வதியை பூலோகம் சென்று தவமியற்றும்படி கட்டளை இட்டார். பூலோகம் வந்த பார்வதி, இன்றைய சென்னைக்கு அருகே உள்ள மாங்காட்டில் காமாட்சியாக தவமிருந்து, பிறகு காஞ்சி மாநகருக்கு வந்தார்.

அங்கே கம்பா நதிக்கரையில் அமர்ந்து மண்ணால் சிவலிங்கம் நிறுவி விரதம் மேற்கொண்டு பூஜித்துக் கொண்டிருந்தாள். அந்த வேளையில், இறைவன் திருவிளையாடல் கம்பா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து வந்தது.

வெள்ளம் வந்த வேகத்தை பார்த்தல், தான் மணலால் செய்து வைத்த லிங்கம் அடித்துக் செல்லப்பட்டு விடும் என்பதை உணர்ந்த பார்வதிதேவி, அந்த லிங்கத்தை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். பார்வதியின் பக்தியின் பரவசம் ஆன சிவபெருமான் அங்கே தோன்றினர்.

ஆக்ரோஷமாக வந்த வெள்ளம் அமைதியாகி வடிந்து போனது. இறைவனுடன் பார்வதி இணைந்தாள்.அன்னை பார்வதி தேவி, காமாட்சியாக இந்த விரதத்தினை மேற்கொண்டால் காரடையான் நோன்பு "காமாட்சி அம்மன் விரதம் " என்றும் அழைக்கப்படுகிறது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts