background img

புதிய வரவு

நோய் தீர்க்கும் சந்தனம்

பழனி கோவில் மூலவர் சிலை நவபாஷனந்தால் உருவாக்கப்பட்டது, திருப்போரூர் முருகன் சிலை மரத்தில் செய்யப்பட்டது. காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில் மூலவர் சிலை மண்ணால் செய்யப்பட்டது. இப்படி ஒவ்வொரு ஆலயத்துக்கும் ஒவ்வொரு விக்கிரக சிறப்பு உண்டு.

அந்த வரிசையில் திருத்தணி முருகன் விக்கிரகமும் இடம் பெற்றுள்ளது. திருத்தணியில் மூலவர் சிலை பச்சைக் கல்லால் செய்யப்பட்டதாகும். இந்த சிலை எப்போது யாரால் செய்யப்பட்டது என்பதை கணிக்க இயலவில்லை. சிலை மார்பில் சிறுபள்ளம் உள்ளது.

அந்த பள்ளத்தில் தினமும் சந்தனம் வைத்து பூஜை நடத்துவார்கள். பிறகு அந்த சந்தனம் பக்தர்களுக்கு வழங்கப்படும். இந்த சந்தனத்தை உட்கொண்டால் தீராத நோய்கள் எல்லாம் தீர்ந்து விடும். இத்தகைய சிறப்புடைய சந்தனம் கோவில் சார்பில் கோவிலிலேயே அரைத்து வழங்கப்படுகிறது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts