தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 13-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திருவாரூர் தொகுதியில் முதலமைச்சர் கருணாநிதி போட்டியிடுகிறார்.
தி.மு.க. கூட்டணி தேர்தல் பிரச்சாரத்தை முதலமைச்சர் கருணாநிதி திருவாரூரில் இன்று மாலை தொடங்கி வைக்கிறார்.
இதற்காக திருவாரூர் தெற்கு வீதியில் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் பிரசாரத்தை தொடங்குவதற்காக முதலமைச்சர் கருணாநிதி இன்று (புதன்கிழமை) காலை 6.30 மணிக்கு சென்னையிலிருந்து கார் மூலம் புறப்பட்டு புதுச்சேரி, கடலூர் வழியாக திருவாரூர் சென்றார்.
மதியம் 2.30 மணி அளவில் திருவாரூர் சென்றடைகிறார். அங்கு அவர் மதிய உணவு சாப்பிட்டு விட்டு, சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார்.
மாலை 6 மணிக்கு தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் தொடங்குகிறது. அதில் கருணாநிதி கலந்து கொண்டு திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்ட தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசுகிறார்.
இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கே.வி.தங்கபாலு, டாக்டர் ராமதாஸ், தொல்.திருமாவளவன், கி.வீரமணி, ஆர்.எம்.வீரப்பன், கே.எம்.காதர்மொய்தீன், பெஸ்ட் ராமசாமி, ஜி.எம்.ஸ்ரீதர் வாண்டையார், என்.ஆர்.தனபாலன், பேராயர் எஸ்றா சற்குணம், கு.செல்லமுத்து, எல்.சந்தானம், பொன்.குமார், எம்.பசீர் அகமது, வலசை ரவிச்சந்திரன், லியாகத் அலிகான் ஆகியோரும் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.
இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் நடிகர் வடிவேலு கலந்துகொண்டு திமுகவுக்கு ஆதரவாக பேசுகிறார். அதுமட்டுல்லாமல் அவர் அதிமுக கூட்டணியில் இருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்தை கடுமையாக விமர்சித்து பேசவிருக்கிறார் என்று கூறப்படுகிறது.

0 comments :
Post a Comment