background img

புதிய வரவு

மார்கழி மாத விரதம்

மாதங்களில் சிறந்தது மார்கழி எனப் பெரியோர் கூறுவார்கள். மார்கழி மாதம் முழுவதும் அதிகாலை எழுந்து நீராடி ஆலயம் சென்று வழிபட வேண்டும். இப்படி அதிகாலை செய்யும் ஒரு நாள் பூஜை ஒரு வருஷம் பூஜை செய்த பலன் கொடுக்கும்.

மார்கழி 30 நாட்களும் காத்யாயினி விரதம் இருந்து கோபிகைகள் கிருஷ்ணனைக் கணவராக அடைந்தனர். இச்செய்திகளையே ஆண்டாள் தனது திருப்பாவையில் பாடினார். வைஷ்ணவ ஆலயங்களில் இராப்பத்து, பகல் பத்து என்னும் முறையில் நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடப்படும்.

சிவ ஆலயங்களில் திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி பாடப்படும். இம்மாதத்தில் வீட்டின் வாயில்களைத் தூய்மை செய்து அழகிய வண்ணக்கோலங்கள் போட வேண்டியது அவசியமாகும். அதில் பசுஞ்சாணத்தைப் பிடித்து பூசணிப்பூவை சொருகி வைப்பர்.

பின் அதனை வரட்டி போல் தட்டி பொங்கலின் போது அதில் பொங்கல் வைத்து ஆற்றில் இடுவார்கள்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts