background img

புதிய வரவு

காங்கிரசுக்கு ஆயுள்ரேகை இல்லை: நடிகர் ராதாரவி பேச்சு

திரு.வி.க. நகர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வ.நீலகண்டனை ஆதரித்து புளியந்தோப்பில் பொதுக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு பாலன் தலைமை தாங்கினார்.

நடிகர் ராதாரவி இதில் பங்கேற்று பேசினார்.

அப்போது அவர், ‘’அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை கைது செய்து 28 நாட்கள் சிறையில் வைத்தனர்.

அவர் வெளியே வந்து மீண்டும் வெற்றி பெற்றார். அது போல் இந்த தேர்தலிலும் ஜெயிப்பது உறுதி. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் நிறைய இலவசங்களை அறிவித்துள்ளனர்.

பெட்ரோல் இலவசம், மின்சாரம் இலவசம் என்று சொல்ல முடியுமா? அவர்கள் தேர்தல் அறிக்கையை பார்த்து என்ன ஆகுமோ என்று பயப்பட வேண்டாம். வெற்றி நமக்குத்தான். அ.தி.மு.க.வுடன் நல்ல கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.

விஜயகாந்தும் சேர்ந்து இருக்கிறார். ரிஷிவந்தியம் தொகுதியில் விஜயகாந்த் ஜெயிப்பார். அ.தி.மு.க. கூட்டணியில் சேர்ந்ததால் அவர் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. முரசு கொட்டப்படும் காங்கிரஸ் கட்சிக்கு ஆயுள்ரேகை இல்லை.

எனவே அக்கட்சி தோற்பது உறுதி காங்கிரஸ்காரர்கள் வயதானவர்கள். வீடுகளில் ஏறி இறங்கி ஓட்டு கேட்க முடியாது. அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறாது என்று ராமதாஸ் பேசுகிறார். அவர் குறைமாத குழந்தை மாதிரி பேசுகிறார்.

அ.தி.மு.க. வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. வ.நீலகண்டன் வெற்றி பெறுவது உறுதி. இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன், லயன் முருகேஷ், ஆர்.டி. சாம்சன், சந்தான கிருஷ்ணன், முகுந்தன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts