background img

புதிய வரவு

காங்கிரசார் மீண்டும் வருவர் என எதிர்பார்க்கவில்லை : மு.க. அழகிரி பேட்டி

சென்னை : ""காங்கிரஸ் கட்சியினர் மீண்டும் வருவார்கள், கூட்டணி அமைப்பார்கள் என, தி.மு.க., எதிர்பார்க்கவில்லை,'' என்று, மத்திய அமைச்சர் அழகிரி கூறினார்.

மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலக உள்ள மு.க. அழகிரி, ஜெகத்ரட்சகன் உள்ளிட்ட தி.மு.க., அமைச்சர்கள் நேற்றிரவு, சென்னை அண்ணா அறிவாலயத்தில், முதல்வர் கருணாநிதியை சந்தித்தனர்.

இச்சந்திப்புக்குப் பின், மு.க. அழகிரி நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
கேள்வி: மத்திய அமைச்சரவையிலிருந்து தி.மு.க., விலகுவது சந்தோஷமா?
பதில்: உங்களுக்கு (நிருபர்களுக்கு) சந்தோஷம் என்றால், எனக்கும் சந்தோஷம்.

கேள்வி: கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகுவதால், தென்மாவட்டங்களில் கடும் போட்டி இருக்குமே?
பதில்: போட்டி இருந்தால் தான் சுவாரஸ்யம் இருக்கும்.

கேள்வி: தி.மு.க., கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகியது பற்றி?
காங்கிரஸ் விலகவில்லை. நாங்கள் விலகி விட்டோம். காங்கிரஸ் கட்சியினர் மீண்டும் வருவார்கள் என, நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
தி.மு.க., அமைச்சர்கள் இன்று காலை 6.45 மணிக்கு டில்லி புறப்படுகின்றனர்.

முதல்வர் இறுதி முடிவு * அழகிரி தகவல் : ""கூட்டணி குறித்து, தலைவர் கருணாநிதி இறுதி முடிவு எடுப்பார்,'' என, மத்தியமைச்சர் அழகிரி தெரிவித்தார்.திருச்சி மாவட்டம், தா.பேட்டை ஒன்றியம் ஜெம்புநாதபுரம் கிராமத்தில், 310 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட, தனியார் உருட்டு உருக்கு ஆலை திறப்பு விழா நேற்று நடந்தது. ஆலையை திறந்து வைத்துவிட்டு புறப்பட்ட, மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் அழகிரியிடம் கூட்டணி நிலவரம் குறித்து நிருபர்கள் கேட்டபோது, ""மத்தியில் பொறுப்பு வகிக்கும் அமைச்சர்கள் டில்லி செல்ல உள்ளோம். கூட்டணி குறித்து தலைவர் கருணாநிதி இறுதி முடிவு எடுப்பார்,'' என்றார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts