background img

புதிய வரவு

விஜயகாந்த் சொத்து எவ்வளவு?

கடலூர் : கடந்த, 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும், வேட்பு மனுவுடன் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தனர். இதை தேர்தல் ஆணையம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
விருத்தாசலம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட அரவிந்த் -பா.ஜ.,- காசிநாதன் -அ.தி.மு.க.,- கோவிந்தசாமி -பா.ம.க.,- செந்தில் முருகன் (பகுஜன் சமாஜ்), மங்காபிள்ளை (சமாஜ்வாடி), எ.விஜயகாந்த் (தே.மு.தி.க.,) மற்றும் சுயேட்சை வேட்பாளர்களான, சாமி, சீனிவாசன், துரை ராமச்சந்திரன், தேவி ஜெரினா, பிரதீப்குமார், எ.விஜயகாந்த், கே.விஜயகாந்த், சி.விஜயகாந்த் ஆகியோரின் பெயர் இடம் பெற்றுள்ளது.
அதில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்தின் சொத்து, குற்றம் மற்றும் கடன் விவரங்கள் அடங்கிய பிரமாண பத்திரத்துக்கு பதிலாக, சுயேட்சையாக போட்டியிட்ட சிதம்பரம் அடுத்த வெய்யலூர் கிராமத்தைச் சேர்ந்த, கே.காசிநாதனின் பிரமாண பத்திரம் வெளியிடப்பட்டுள்ளது.
கே.காசிநாதனின் பிரமாண பத்திரம் மற்றொரு சுயேட்சையான கடலூர் சுத்துகுளம், எ.விஜயகாந்த் பெயருக்கும், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தின் பிரமாண பத்திரம், சுயேட்சையாக போட்டியிட்ட திருவண்ணாமலை மாவட்டம், டி.வேலூர் கிராமத்தைச் சேர்ந்த சி.விஜயகாந்த் பெயரில் வெளியிடப்பட்டுள்ளது.
சுயேட்சைகளான கடலூர் சுத்துகுளம், எ.விஜயகாந்த் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் டி.வேலூர் கிராமத்தைச் சேர்ந்த, சி.விஜயகாந்த் ஆகியோரின் பிரமாண பத்திரங்கள் வெளியிடப்படவில்லை. ஒரே தொகுதியில் ஏகப்பட்ட விஜயகாந்த்கள் போட்டியிட்டதால், தேர்தல் கமிஷன் குழப்பமடைந்துவிட்டதோ, என்னவோ!

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts