background img

புதிய வரவு

லிபியாவில் வன்முறை நீடிப்பு: அதிபர் கடாபிக்கு ஒபாமா எச்சரிக்கை; ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும்

லிபியாவில் போராட்டக் காரர்கள் வசம் இருக்கும் நகரங்களை மீண்டும் தன் வசப்படுத்துவதில் கடாபி அரசு தீவிரமாக உள்ளது. எனவே, அவரது ஆதரவு ராணுவத்தினர் போராட்டக்காரர்கள் வசம் இருக்கும் மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள எண்ணை வளம் மிக்க துறைமுகம் நகரமான ராஸ் லனூப் மீது கடும் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

2-வது நாளாக நேற்று அந்நகரின், மீது பறந்து ராணுவத்தின் போர் விமானங்கள் சரமாரியாக குண்டுவீசி தாக்கின. பதிலுக்கு போராட்டக்காரர்களின் புரட்சிப்படையும் தாக்குதல் நடத்தியது. இதனால் இரு பிரிவினருக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. ராணுவம் குண்டு வீசியதில் 2 குழந்தைகள் பலியாகினர். இதற்கிடையே தலைநகர் திரிபோலியை நோக்கி புரட்சிப்படை முன்னேறி வருகிறது.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே சண்டை வலுவடைந்துள்ளது. போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடாபியின் ராணுவம் கொடூர தாக்குதல் களை நடத்தி வருவதற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கடாபியின் ஆதரவு அதிகாரிகள் மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது மிகவும் வருந்தத்தக்கது என்று தெரிவித்துள்ளார். புரூசெல்ஸ் நகரில் பன்னாட்டு ராணுவத்தின் கூட்டம் நடந்தது. அதில், லிபியாவில் தற்போது நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது லிபியாவில் அமைதியை ஏற்படுத்த ராணுவ நடவடிக்கை மேற்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.

மேலும், கலவரத்தால் பாதிக்கப்பட்ட லிபியா மக்களுக்கு மேலும் ரூ.68 கோடி வழங்கவும் அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இந்த தகவலை ஒபாமா தெரிவித்ததாக அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதற்கிடையே, கடாபியின் ராணுவத்துக்கு எதிராக போராடும் புரட்சி படைக்கு ஆயுத உதவி அளிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. விமானங்கள் மூலம் ஆயுதங்கள் மற்றும் கமாண் டோக்களை அனுப்பவும் ஏற்பாடு செய்து வருகிறது.

கடந்த 2001-ம் ஆண்டு தலிபான்களிடம் இருந்து ஆப்கானிஸ்தானை மீட்க இதுபோன்ற நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. அதே முறை லிபியாவிலும் கடைபிடிக்கப்பட உள்ளது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, பெங்காசியில் போராடும் புரட்சி படைக்கு சவுதி அரேபியா ஆயுதம் வழங்கும்படி அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு சவுதிஅரேபியா மன்னர் மறுத்து விட்டதாக தெரிகிறது. இருந்தும் அவருடன் அமெரிக்கா பேசி வருகிறது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts