background img

புதிய வரவு

ஸ்ரீரங்கம் தொகுதியில் ஜெயலலிதா மனு தாக்கல்

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 19-ந் தேதி தொடங்கியது. மனு தாக்கல் 26-ந் தேதி கடைசிநாளாகும். இதனால் இன்று மனு தாக்கல் சூடு பிடித்தது. அ.தி.மு.க. வேட்பாளர்கள் இன்று தமிழ்நாடு முழுவதும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் ஜெயலலிதா திருச்சி சென்றார். காலை 9.20 மணிக்கு, திருச்சி விமான நிலையத்தில் வந்து இறங்கினார்.

வரவேற்பு முடிந்ததும் 9.30 மணிக்கு ஜெயலலிதா சங்கம் ஓட்டலுக்கு சென்று சிறிது நேரம் ஓய்வு எடுத்தார்.அதன்பிறகு சங்கம் ஓட்டலில் இருந்து கார் மூலம் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் சென்றார். அங்கு காலை 11 மணிக்கு மாவட்ட நிலச்சீர்திருத்த உதவி ஆணையரும், ஸ்ரீரங்கம் தேர்தல் அதிகாரியுமான குணசேகரனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

வேட்புமனுதாக்கலுக்கு உரிய ரூ.10 ஆயிரம் டெபாசிட் தொகையை ஜெயலலிதா செலுத்தினார். வேட்புமனு தாக்கலுக்கு தேர்தல் ஆணையம் அறிவித்தபடி குறிப்பிட்ட வாகனங்கள், ஆட்கள் மட்டுமே செல்ல வேண்டும் என்பதால் ஜெயலலிதா காருடன் குறைந்த வாகனங்களே சென்றன. ஜெயலலிதாவுடன் சசிகலாவும் சென்றிருந்தார். ரோட்டின் இருபுறமும், தொண்டர்கள் குவிந்திருந்தனர். அவர்களை பார்த்து ஜெயலலிதா உற்சாகத்துடன் இரட்டை விரலை காட்டி மகிழ்ச்சி தெரிவித்தார்.

இன்று மாலை 4 மணிக்கு ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். திருவானைக்காவல் மாம் பழச்சாலையில் இருந்து பிரசாரத்தை தொடங்கும் ஜெயலலிதா இரவு 9.30 மணிக்கு மரக்கடை எம்.ஜி.ஆர். சிலையில் பிரசாரம் செய்கிறார். இரவு 10 மணிக்கு பாலக்கரையில் பிரசாரத்தை முடிக்கிறார். நாளை மறுநாள் (25-ந் தேதி) மற்றும் 26-ந்தேதி ஆகிய 2 நாட்களும் ஜெயலலிதா திருச்சியில் பிரசாரம் செய்கிறார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts