background img

புதிய வரவு

அரையிறுதியில் இந்தியா-பாக்., மோதல்?

புதுடில்லி: உலக கோப்பை தொடரின் அரையிறுதியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோத வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கிரிக்கெட் அரங்கில், இந்தியா-பாகிஸ்தான் மோதல் என்றால் அதிக எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கும். அதுவும் உலக கோப்பை போன்ற மிகப்பெரிய தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மோதல் என்றால் சொல்லவா வேண்டும்.
இந்தியா ஆதிக்கம்:
உலக கோப்பை அரங்கில், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் நான்கு முறை (1992, 96, 99, 2003) மோதியுள்ளன. இதில் அனைத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. கடந்த 2007ல் கரீபிய மண்ணில் நடந்த உலக கோப்பை தொடரில் இந்தியா (பி), பாகிஸ்தான் (டி) அணிகள் வெவ்வேறு பிரிவில் இடம் பெற்றதால் லீக் சுற்றில் மோத வாய்ப்பு இல்லாமல் போனது. தவிர, இவ்விரு அணிகள் முதல் சுற்றோடு வெளியேறியதால், அடுத்த சுற்றுகளிலும் எதிர்கொள்ள முடியாமல் போனது.
ஐந்தாவது முறை:
தற்போதைய பத்தாவது உலக கோப்பை தொடரில் இந்தியா (பி), பாகிஸ்தான் (ஏ) அணிகள் வெவ்வேறு பிரிவில் இடம் பிடித்ததால், மீண்டும் ஒருமுறை லீக் சுற்றில் மோத முடியாமல் போனது. காலிறுதியிலும் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோத வாய்ப்பு இல்லாமல் போனது. ஏனெனில் வரும் 23ம் தேதி மிர்புரில் நடக்கும் போட்டியில் பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. வரும் 24ம் தேதி நடக்கும் காலிறுதியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்கின்றன.
இவ்விரு அணிகள் தங்களது காலிறுதிப் போட்டிகளில் வெற்றி பெறும் பட்சத்தில், வரும் 30ம் தேதி மொகாலியில் நடக்கவுள்ள அரையிறுதியில் மோதலாம். இதன்மூலம் இவ்விரு அணிகள் ஐந்தாவது முறையாக உலக கோப்பை அரங்கில் எதிர்கொள் நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதில் இந்திய அணி தனது ஆதிக்கத்தை தொடருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts