கோவை: ஊட்டி, வால்பாறை மலைகளையே ஏறமுடியாத சீமான் இமயமலை போன்ற கட்சியான காங்கிரஸை எதிர்த்து பிரச்சாரம் செய்யப் போவதாக கூறுவது வேடிக்கையாக உள்ளது என்று காங்கிரஸ் நிர்வாகிகள் கூறுகின்றனர்.
நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் நீலகிரி மாவட்டத்தில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதியில் பிராச்சாரம் செய்யப் போவதில்லை என்று கூறப்படுகின்றது.
வரும் சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி 63 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. இதில் அறந்தாங்கி தொகுதியில் திருநாவுக்கரசர் போட்டியிடுவார் என்று தெரிகிறது. இவர் சீமானின் நெருங்கிய நண்பர் என்று கூறப்படுகின்றது. இதனால் சீமான் அறந்தாங்கி தொகுதியில் பிராசராம் செய்ய தயக்கம் காட்டி வருவதாகத் தெரிகிறது.
இது தவிர காங்கிரஸ் கட்சி போட்டியிடும் மலைப் பிரதேசமான உதகை மற்றும் வால்பாறை ஆகிய தொகுதிகளில் சீமான் பிரசாரம் செய்யப் போவதில்லையாம். ஆனால் இந்த 3 தொகுதிகள் தவிர்த்து காங்கிரஸ் போட்டியிடும் ஏனைய 60 தொகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொள்ளவிருக்கிறாராம்.
மத்திய உளவுத்துறை மூலம் இந்த தகவலை தெரிந்து கொண்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மலையேற முடியாத சீமான் இமயமலை போன்ற கட்சியான காங்கிரஸை எதிர்த்து பிரச்சாரம் செய்யப் போவதாக கூறுவது வேடிக்கையாக உள்ளது என்கின்றனர்.

0 comments :
Post a Comment