background img

புதிய வரவு

யுவராஜுக்கு திருமணம்

உலக கோப்பை கிரிக்கெட் விளையாடும் லெவன் அணியில் களமிறங்குவாரா அல்லது வெளியில் உட்கார வைக்கப்படுவாரா என, யுவராஜ் சிங் குறித்து அதிக குழப்பம் நிலவியது. இந்நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான முதல் போட்டியில் இவருக்கு வாய்ப்பு தரப்பட்டது. ஆனால் இதில் பேட் செய்யவில்லை. பின் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்து அசத்தினார்.
தொடர்ந்து அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் பவுலிங்கில் மிரட்டிய இவர் 5 விக்கெட் வீழ்த்தினார். பின் அரைசதம் அடித்து அணிக்கு வெற்றி தேடித்தந்தார். நெதர்லாந்துக்கு எதிராகவும் பேட்டிங்கில் ஜொலித்து, "ஹாட்ரிக் அரை சதம் அடித்தார். இவரது இந்த எழுச்சிக்கு காரணம் திருமண செய்தியாம். ஆம், யுவராஜ் சிங்கிற்கு திருமணம் செய்ய அவரது தந்தை யோகராஜ் சிங் முடிவெடுத்துள்ளாராம்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,"" யுவராஜ் சிங்கிற்கு திருமணம் செய்ய முடிவெடுத்தது உண்மைதான். ஆனால் இப்போது அல்ல. உலக கோப்பை தொடர் முடிந்தவுடன், திருமணம் நடத்த ஏற்பாடு செய்துள்ளோம், என்றார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts