பிரபல இயக்குநர் மணிரத்னத்தின் அடுத்த படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் அனுஷ்கா ஒப்பந்தம் ஆகியுள்ளார். பிரபல எழுத்தாளர் கல்கி எழுதிய புகழ் பெற்ற நாவலின் அடிப்படையில் தயாரிக்கப்படும் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் வல்லவராயன் வந்தியதேவனாக விஜய், அருள்மொழி வர்மானாக ஆர்யா, ஆதித்த கரிகாலனாக தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு ஆகியோர் நடிக்கின்றனர். முதலாம் ராஜராஜசோழனின் வரலாற்றை விளக்கும் இந்த படம் மணிரத்னத்தின் கனவுத் திட்டம்.மணிரத்னம் 9 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு தமிழ் படம் இயக்குகிறார். ஜெயமோகனின் துணையுடன் திரைக்கதை உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த கதையை ஏற்கனவே சினிமாவாக எடுக்க முயற்சி செய்த கமலும் அவ்வப்போது சில யோசனைகளைக் கூறிவருகிறார். இந்த சினிமாவை உருவாக்கும் பணியில் ஏ.ஆர்.ரகுமான், சந்தோஷ் சிவன், சாபு சிறியல், ஸ்ரீகர் பிரசாத ஆகியோர் உள்ளனர். அகடோபரில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது; தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாக இருக்கும் இதன் மொத்த பட்ஜெட் 100 கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments :
Post a Comment