background img

புதிய வரவு

ஒளிமயமான வாழ்வு

சூரியன் மறைந்து சந்திரன் தோன்றும்போது இரவு வருகின்றது. திங்கள் மறைந்து ஆதவன் விழிக்கும்போது பகல் பிறக்கின்றது. இது பிரபஞ்சத்தைப் பொருத்த விஷயம். சிவபெருமானோ தீ, சூரியன், சந்திரன் ஆகிய மூன்று கண்களை உடைய ஜோதி வடிவம். எனவே அவருக்கு இரவுமில்லை.

பகலும் இல்லை. எனினும் பக்தர்களின் பாவங்களை நீக்க லிங்கத் தி ருமேனியாக சிவராத்திரி அன்று தோன்றினார். அன்றிரவு அவரை தரிசிப்பவர்க்கு தமோ குணம் என்னும் இருள் விலகி சிவ பக்தி என்னும் ஒளி, வாழ்க்கை உண்டாகும்.

வம்சம் தழைக்கும்! சிவபெருமானுடைய அட்ட வீரட்டத்தலங்களில் அசுர யானையின் தோலை உரித்துப் போர்த்துக் கொண்ட கஜ சம்ஹார கோலம் மிகவும் முக்கியமானது. சைவத் திருமுறைகள் பலவற்றில் அண்ணலின் இந்தக் கோலம் பாடப்படுகின்றது.

மயிலாடுதுறைக்கு அருகே உள்ள திருவழுவூரில் சிவபெருமானின் கசம்ஹார கோலத்தைக் காணலாம். தங்களது வம்சம் தழைக்கவில்லையே என்று ஏங்குபவர்கள், வழுவூரில் உள்ள பாலாங்குராம்பிகையையும் கஜசம்ஹார மூர்த்தியையும் தரிசித்தால் புத்திர பாக்கியம் உண்டாகும்.

இதை உணர்த்தும் விதத்தில் இளங்கிளை நாயகி (பாலாங்குராம்பிகை) என்ற இனிய பெயரை தாங்கி, இங்கு தாயார் தரிசனம் அளிக்கின்றாள். பரம் பொருள் திருமாலும், பிரமனும் தங்களுக்குள் யார் பெரியவர்? என்று விவாதித்தனர். அவர்கள் மத்தியில் ஒளிப் பிழம்பாக, பிரம்மாண்ட வடிவில் பரமேஸ்வரன் தோன்றினார்.

அந்த ஜோதியின் ஆதியையும், அந்தத்தையும் காண முடியாது நான் முகனும், நாராயணும் திகைத்தனர். பரமேஸ்வரனே பரம்பொருள் என்று போற்றினர். அவர்கள் பக்திக்கு இறங்கி ஒரு மலை வடிவானார் சிவபெருமான்.

அந்த மலையைப் பூ ஜிப்பதும் கடினம் என்பதால், தானே ஒரு அழகிய சிவலிங்க வடிவெடுத்து காட்சி தந்தார். இந்த சிவலிங்கத் திருமேனியே ஸ்ரீஅருணாசலேசுரர் ஆகும்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts