background img

புதிய வரவு

கோ‌ழி‌க்க‌றி மசாலா

கோ‌ழி‌க்க‌றி - 1/2 கிலோ (துண்டாக நறுக்கிக் கொள்ளவும்)
வெங்காயம் - 1/2 கிலோ (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூ‌‌ள், த‌னியா தூ‌ள் - 1 தே‌க்கர‌ண்டி
மிளகாய்த் தூள் - 2 தே‌க்கர‌ண்டி
தக்காளி-6
இஞ்சி, பூண்டு, ப‌ச்சை ‌மிளகா‌ய் ‌விழுது - 2 ‌ஸ்பூ‌ன்

தாளிக்க:
எண்ணெய் - 1/2 கப்
சோம்பு, பிரிஞ்சி இலை
புளிக் கரைசல் - 1 எலுமிச்சை அளவு
துருவிய தேங்காய், 2 பட்டை, 2 ‌ஸ்பூ‌ன் சோம்பு - அரை‌க்கவு‌ம்

செ‌ய்யு‌ம் முறை:

அடுப்பில் கடாயை வைத்து தா‌ளி‌க்க வே‌ண்டியதை போட்டுத் தாளிக்கவும்.

பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

அ‌தி‌ல் மசாலாப் பொடிகள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

பிறகு, தக்காளியு‌ம், கோ‌ழி‌‌க்க‌றியையு‌ம் போட்டு வதக்கவும்.

சிறிதளவு தண்ணீர் விட்டு, மெலிதான தீயில் மூடி வைக்கவும்.

முக்கால் வாசி வெந்தவுடன் புளிக் கரைசலை விட்டு கொதிவந்ததும் தேங்காய் பட்டை, சோம்பு பேஸ்ட்டையும் சேர்த்துக் கைவிடாமல் கிளறவும். கொதிக்கவிடவும்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts