ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பணியாற்றும் பெண் போலீஸ் வள்ளி தன்னுடன் பணிபுரிந்த போலீஸ் உயர் அதிகாரிகள் செக்ஸ் தொல்லைகள் கொடுத்ததாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் பெண் ஊழியர்கள் மீதான செக்ஸ் புகார் தொடர்பாக உச்சநீதிமன்ற ஆணைப்படி கமிட்டி அமைக்கப்படவில்லை என்றும் கூறியிருந்தார்.
வள்ளி மீதான புகார் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலத்தில் உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இரவு 7 மணிக்கு தொடங்கிய விசாரணை நள்ளிரவு 12 மணி வரை நீடித்தது. இதற்கு ஆட்சேபம் தெரிவித்து வள்ளியின் தரப்பு வக்கீல் மணிகண்டன் சென்னை ஐகோர்ட்டில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இது குறித்து வக்கீல் மணிகண்டன் கூறியதாவது:-
ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண் போலீசுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகள் தொடர்பாக விசாரிக்க கமிட்டி அமைக்கப்பட வில்லை. இந்த நிலையில் குழு இருப்பது போன்று அதிகாரிகள் வள்ளியிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரனுக்கு நோட்டீஷ் அனுப்பப்பட்டது.
ஆனால் அதற்கு பதில் வரவில்லை. இதையடுத்து டி.ஜி.பி.போலோநாத் மற்றும் விசாரணை செய்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா, சூப்பிரண்டின் நேர்முக உதவியாளர் ராஜேஸ்வார், துணை போலீஸ் சூப்பிரண்டு லட்சுமி, தொண்டு நிறுவன தலைவி கலைவாணி, இன்ஸ்பெக்டர் வேலுமணி மற்றும் அரசியில் பிரமுகர் ஒருவர் உள்பட 8 பேர் மீது ஐகோர்ட்டில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே வள்ளி தன்னை வேலை செய்ய விடாமல் தடுத்ததாக உள்துறை செயலாளருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூலம் ஒரு புகார் மனு கொடுத்து அனுப்பினார். அந்த மனுவை சூப்பிரண்டு திருப்பி அனுப்பி விட்டதாகவும், இன்ஸ்பெக்டர் மூலம் அந்த மனுவை அனுப்பும்படி கேட்டுக்கொண்டதாகவும் கூறுப்படுகிறது.

0 comments :
Post a Comment