background img

புதிய வரவு

மீ‌ன் மசாலா

தேவையானவை:

மீன் - 4 துண்டுகள்
வெங்காயம் - 3 நறுக்கியது
தக்காளி - 1 நறுக்கியது
இஞ்சி, பூண்டு ‌விழுது - 2 தே‌க்கர‌ண்டி
க‌றிவே‌ப்‌பிலை, மல்லி இலை - ‌சி‌றிது
மிளகாய்த் தூள் - 1 தே‌க்கர‌ண்டி
மிளகுத் தூள் - 1/2 தே‌க்கர‌ண்டி
மஞ்சள் தூள் - 1/2 தே‌க்கர‌ண்டி
உப்பு - தேவையான அளவு
பட்டை, லவ‌ங்க‌ம் - 1 சிறிது
எண்ணை - பொரிக்க தேவையான அளவு

செய்முறை:

மீன் துண்டுகளில் 1 துண்டு மீனை மட்டும் முள்ளை நீக்கி உ‌தி‌ர்‌த்து வைக்கவும்.

மீதமுள்ள 3 மீன் துண்டுகளில் கொஞ்சம் மிளகாய், மஞ்சள் தூள், இஞ்சி, பூண்டு ‌விழுது, உப்பு சேர்த்து பிரட்டி ஊற வை‌க்கவு‌ம்.

பின் மசாலா பிரட்டிய 6 துண்டுகளை தவா‌வி‌ல் போ‌ட்டு எ‌ண்ணெ‌ய் ‌வி‌ட்டு பொரித்து எடுக்கவும்.

வாண‌லி‌யி‌ல் எண்ணை ‌வி‌ட்டு பட்டை, வெங்காயம், கறிவேப்பிலை, இ‌ஞ்‌சி, பூ‌ண்டு, த‌க்கா‌ளி, கொ‌த்து ‌ம‌ல்‌லி என அனை‌த்தையு‌ம் போ‌ட்டு நன்கு வதக்கவும்.

அ‌தி‌ல், உப்பு, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், மிளகுத் தூள் சேர்த்து மு‌ள் எடு‌த்த ‌மீனை சே‌ர்‌த்து 5 ‌நி‌மிட‌ம் வேக ‌விடவு‌ம்.

‌பிறகு பொரித்த மீன்களை சேர்த்து லேசாக‌க் ‌கிள‌றி இற‌க்கவு‌ம்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts