சென்னை: ஐ.பி.எல்., லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், புனே வாரியர்ஸ் அணிகள் மீண்டும் மோதுகின்றன. கடந்த முறை போல இன்றும் வெற்றியை தொடர தோனியின் சென்னை அணி காத்திருக்கிறது.
நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடக்கிறது. இதில் மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் இன்று நடக்கும் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ், புனே வாரியர்ஸ் அணிகள் மீண்டும் சந்திக்கின்றன.
விஜய் சந்தேகம்:
நான்காவது ஐ.பி.எல்., தொடரில் சென்னை அணி இதுவரை பங்கேற்ற 6 போட்டிகளில் 3ல் வென்றுள்ளது. இருப்பினும் அணியின் பேட்டிங்கை பொறுத்தவரை, சொல்லிக்கொள்ளும்படி இல்லை. முதல் போட்டியில் 64 ரன் எடுத்த அனிருதா, அடுத்து சொதப்பி வருகிறார். கொச்சிக்கு எதிராக ரெய்னா 50 ரன்கள் எடுத்தார். இப்படி ஒரு போட்டிக்கு ஒருவர் மட்டுமே ரன்குவிப்பில் ஈடுபடுகின்றனர். மற்றவர்கள் சொதப்புவதால், பெரிய அளவிலான ஸ்கோரை எட்ட முடியவில்லை. இதுவரை பங்கேற்ற போட்டிகளில், 180 ரன்கள் எடுத்துள்ள முரளி விஜய், தொடையின் பின் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இன்று விளையாடுவது சந்தேகம் தான்.
கேப்டன் தோனியும் இந்த வரிசையில் தான் உள்ளார். மைக்கேல் ஹசி மட்டும் ஓரளவுக்கு நிலையான ஆட்டத்தை தருகிறார். பின் வரிசையில் ஆல்பி மார்கலும் "பார்ம்' இல்லாமல் தவிக்கிறார். "மிடில் ஆர்டரில்' பத்ரிநாத் நம்பிக்கை தருகிறார். இன்று அனைத்து பேட்ஸ்மேன்களும் எழுச்சி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பவுலிங் ஆறுதல்:
வேகப்பந்துவீச்சு பிரிவில் போலிஞ்சர் மீண்டும் அசத்த துவங்கியுள்ளது பெரும் பலம். இவருடன் ஆல்பி மார்கல் நம்பிக்கை தருவது சாதகமானது தான். ரந்திவ் நீக்கப்பட்டு சவுத்தி இடம் பெறலாம். மற்றபடி சுழலில் அஷ்வின், ஜகாதி இடம் பெறுவது தொடரலாம்.
அடுத்தடுத்த அதிர்ச்சி:
முதல் இரண்டு போட்டிகளில் வெற்றிகரமாக துவக்கியது, அறிமுக அணி புனே வாரியர்ஸ். அடுத்து நடந்த பஞ்சாப், கொச்சி, சென்னை அணிகளுக்கு எதிரான "ஹாட்ரிக்' தோல்விகளால் துவண்டு கிடக்கிறது. பேட்டிங்கை பொறுத்தவரையில் ஸ்மித் காயம் காரணமாக விளையாடாதது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அனுபவ வீரர்கள் ரைடர், நாதன் மெக்கலம் சிறப்பாக விளையாடினால் நல்லது. இளம் வீரர்கள் மிதுன் மன்ஹாஸ், மோனிஷ் மிஸ்ரா நிலையான ஆட்டத்தை அணிக்கு வழங்க வேண்டும். கேப்டன் யுவராஜ் சிங், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக ரன் சேர்ப்பார் என நம்பலாம். கடந்த தொடரில் அதிரடியில் பல போட்டிகளை வென்று தந்த உத்தப்பா, இம்முறை தொடர்ந்து கைவிடுவது அணிக்கு சிக்கல் தான்.
பவுலிங் அசத்தல்:
புனே அணிக்கு பவுலிங் பெரும் பலமாக உள்ளது. ஜெரோம் டெய்லர், பார்னலுடன், அல்போன்சா தாமஸ், ஸ்ரீகாந்த் வாக் மீண்டும் அசத்த முயற்சிக்கலாம். இவர்களுடன், ஜெசி ரைடர், முரளி கார்த்திக் "பார்ட் டைம்' யுவராஜ் சிங் விக்கெட் வேட்டைக்கு தயாராக உள்ளனர்.
பழிதீர்க்குமா?
நேற்று முன்தினம் சென்னையில் நடந்த லீக் போட்டியில் புனே அணி, சென்னை கிங்சிடம் தோல்வியடைந்து இருந்தது. ஒருநாள் இடைவெளியில், இன்று மீண்டும் அவர்களது சொந்த மண்ணில், சென்னையை எதிர்கொள்கின்றனர். இதில் சென்னையை வீழ்த்தி, புனே வீரர்கள் பழிதீர்ப்பார்களா?
எழுச்சி பெறுமா டெக்கான் சார்ஜர்ஸ்
கொச்சி: ஐ.பி.எல்., தொடரின் லீக் போட்டியில் தோல்வியில் துவண்டு கிடக்கும் டெக்கான் சார்ஜர்ஸ் அணி, கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணியை இன்று சந்திக்கிறது.
கடந்த 2009ல் சாம்பியன் பட்டம் வென்ற டெக்கான் அணி, இம்முறை கேப்டன் மாற்றத்துடன் களமிறங்கியது. புதிய கேப்டனாக வந்துள்ள சங்ககரா தலைமையில் டெக்கான் அணி இதுவரை பங்கேற்ற 6 போட்டிகளில் பெங்களூரு, டில்லி அணிக்கு எதிரான போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்றது. மற்ற நான்கு போட்டிகளில் (ராஜஸ்தான், கோல்கட்டா, பஞ்சாப், மும்பை) தோல்வியடைந்தது. இனியும் தோல்வி தொடரும் பட்சத்தில் அடுத்த சுற்று வாய்ப்பு கேள்விக்குறியாகிவிடும்.
இதற்கு, பேட்டிங்கில் இளம் வீரர்கள் சிகர் தவான், சன்னி சோகல் தொடர்ந்து ஏமாற்றி வருவது முக்கிய காரணம். இதனால் பின் வரும் வீரர்களுக்கு நெருக்கடி அதிகரித்து விடுகிறது. பரத் சிப்லி, ரவி தேஜாவின் ஏமாற்றம் தொடர்கிறது. கேப்டன் சங்ககராவும் தன்பங்கிற்கு அணியை கைவிடுகிறார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலிய உள்ளூர் அணி வீரராக கிறிஸ்டியனும், இதுவரை சொல்லிக்கொள்ளும் படி சாதிக்கவில்லை. இதனால், இவரை பேட்டிங் ஆர்டரில் முன்வரிசையில் களமிறக்கிப் பார்க்கலாம்.
பவுலிங்கில் டெக்கான் அணி சிறப்பாக செயல்படுகிறது. வேகத்தில் ஸ்டைன், இஷாந்த் சர்மா அசத்துகின்றனர். சுழலில் அமித் மிஸ்ரா, பிரக்யான் ஓஜா விக்கெட் வேட்டையை தொடரலாம்.
வெல்லுமா கொச்சி:
கொச்சி அணியை பொறுத்தவரையில் 6 போட்டிகளில் பங்கேற்று, தலா 3 வெற்றி, தோல்வியுடன் உள்ளது. இந்த அணி "ஹாட்ரிக்' வெற்றி பெற்ற நிலையில், கடந்த போட்டியில் பிரண்டன் மெக்கலம் விளையாடாதது பின்னடைவாக அமைந்தது. இன்று இவர் களமிறங்கலாம் என்று தெரிகிறது. கேப்டன் ஜெயவர்தனா, லட்சுமண் மீண்டும் ஆறுதல் தர காத்திருக்கின்றனர். இளம் வீரர்கள் பார்த்திவ் படேல், ரவிந்திர ஜடேஜா பேட்டிங்கில் அசத்துவது தொடரும்.
பவுலிங்கில் ஆர்.பி.சிங், வினய் குமார் இருவரும் சிறப்பாக செயல்படுகின்றனர். கடந்த சில போட்டிகளில் வாய்ப்பு பெறாத ஸ்ரீசாந்த், இன்று களமிறங்குவார் என்று தெரிகிறது. சுழலில் முரளி தரன், கோமெஜ், ஜடேஜாவுடன் பெரேராவும் கைகொடுக்கலாம்.

0 comments :
Post a Comment