background img

புதிய வரவு

நயன்தாரா திருமண தடை நீங்குகிறது; பிரபு தேவா-ரம்லத்துக்கு ஜூனில் விவாகரத்து; சொத்துக்களை எழுதி கொடுத்தார்

நயன்தாராவும், பிரபு தேவாவும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். இவர்கள் திருமணத்தை முதல் மனைவி ரம்லத் எதிர்த்ததால் அவரை விவாகரத்து செய்கிறார். முதலில் விவாகரத்துக்கு ரம்லத் சம்மதிக்கவில்லை.

இதையடுத்து பல லட்சங்கள் ரொக்கமாகவும், சொத்துக்களை அவர் பெயரில் மாற்றி எழுதி தரவும் பிரபுதேவா முன்வந்தார். இதையடுத்து ரம்லத் விலக முடிவு செய்தார்.

இருவரும் மனம் ஒத்து பிரிவதாக குடும்ப நல கோர்ட்டில் 3 மாதங்களுக்கு முன் விவாகரத்து மனு தாக்கல் செய்தனர். வருகிற ஜூன் மாதம் இவ்வழக்கு விசாரணைக்கு வருகிறது. அப்போது இருவருக்கும் விவாகரத்து கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

ரம்லத்துக்கு சொத்துக்கள் தர உறுதி அளித்தபடி அவர் பெயரில் அவற்றை மாற்றி எழுதி பத்திரப் பதிவு செய்து வருகிறார். முதல் கட்டமாக ரூ.5 லட்சத்தை ரம்லத்திடம் வழங்கியுள்ளார். மேலும் 5 லட்சம் ரூபாயை விவாகரத்து கிடைத்ததும் வழங்குவதாக கூறியுள்ளார்.

கிழக்கு கடற்கரையில் உள்ள 22 சென்ட் நிலத்தை ரம்லத், மற்றும் குழந்தைகள் பெயரில் மாற்றி எழுதியுள்ளார். அதில் தன்னை பங்குதாரராக சேர்த்து உள்ளார். அடுத்து அண்ணா நகரில் உள்ள வீட்டை ரம்லத் பெயரில் மாற்றி பத்திரப் பதிவு செய்ய ஏற்பாடு நடக்கிறது.

ஐதராபாத்தில் உள்ள வீடுகளை குழந்தைகள் பெயருக்கு மாற்றி எழுதுகிறார். இவற்றுக்கான பத்திரப் பதிவுகள் ஓரிரு வாரத்தில் முடிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு சொத்துக்கள் மாற்றி எழுதப்பட்ட விவரங்கள் கோர்ட்டில் தெரிவிக்கப்படும்.

விவாகரத்து கிடைத்ததும் ஜூலை மாதம் நயன்தாரா, பிரவுதேவா திருமணம் நடைபெறும் என தெரிகிறது. மும்பையில் திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

நயன்தரா இப்போதே சினிமாவில் நடிப்பதை குறைத்துக்கொண்டு வருகிறார். புதுப்படங்களுக்கு ஒப்பந்தம் தரவில்லை. திருமணத்துக்கு பிறகு சினிமாவுக்கு முழுக்கு போடுவார் என தெரிகிறது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts