background img

புதிய வரவு

தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ. 152 உயர்வு; ஒரு கிராம் ரூ.2022க்கு விற்பனை

தங்கம் விலை பல்வேறு காரணங்களால் ஏறுவதும், இறங்குவதுமாக உள்ளது. கடந்த வாரம் சர்வதேச அளவில் தங்கத்துக்கான தேவை அதிகரித்தது. அதே சமயத்தில் தங்கத்தின் மீது முதலீடு செய்து இருப்பு வைப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்தது.

தங்கம் தேவை அதிகரித்ததால், அதன் விலை பல மடங்கு உயர்ந்தது. கடந்த வார இறுதியில் ஒரு பவுன் தங்கத்தின் விலை 16 ஆயிரம் ரூபாயை கடந்தது. நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ. 16,024 ஆக இருந்தது.

ஒரு கிராம் தங்கம் 2003 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) தங்கம் விலை “கிடுகிடு”வென எகிறியது. இன்று ஒரே நாளில் பவுனுக்கு 152 ரூபாய் உயர்ந்து விட்டது. இதனால் தங்கம் ஒரு பவுன் விலை ரூ. 16,176 ஆக உள்ளது.

ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 2022 ரூபாயாக விற்பனை ஆனது. 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பவுனுக்கு கொடுத்த பணத்தை கூடுதலாக பணம் கொடுத்தால்தான் ஒரு கிராமாவது வாங்க முடியும் என்ற நிலை உள்ளது.

இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்ததற்கு சர்வதேச அளவில் டாலர் மதிப்பு வீழ்ச்சி அடைந்தது தான் காரணம் என்று தெரிய வந்துள்ளது. தங்கம் விலை இன்னும் சில தினங்களுக்கு குறையாது என்று சென்னை நகைக் கடைக்காரர்கள் கூறினார்கள்.

அடுத்த மாதம் (மே) 6-ந்தேதி அட்சய திருதியை தினம் வருகிறது. அன்று தங்கம் வாங்கினால் குடும்பத்தில் செல்வம் பெருகும் என்ற ஐதீகத்தை நிறைய பேர் நம்புகிறார்கள் அன்று நல்ல முகூர்த்த நேரத்தில் தங்கம் வாங்க வேண்டும் என்று பலரும் இப்போதே முன்பதிவு செய்யத் தொடங்கி உள்ளனர்.

இதனால் தங்கம் விலை உயர வாய்ப்பு அதிகமாகி உள்ளதாக கூறப்படுகிறது. இது நடுத்தர மற்றும் ஏழை மக்களின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts