நடிகை நயன்தாராவை காதலித்து வரும் பிரபுதேவா, அவரை திருமணம் செய்து கொள்வதற்காக தனது சொத்துக்களை மாஜி காதல் மனைவி ரமலத்துக்கு எழுதிக் கொடுத்துள்ளார். பிரபுதேவா - நயன்தாரா இடையேயான கள்ளக்காதல் வெட்ட வெளிச்சத்துக்கு வந்த பிறகு, அந்த காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தவர் பிரபுதேவாவின் மனைவி ரமலத். தனது கணவரை நயன்தாராவிடம் இருந்து மீட்டுத் தாருங்கள் என்று கோர்ட் படியேறியவரிடம், வழக்கை வாபஸ் பெறும்படி திரையுலகைச் சேர்ந்த பலரும் பேரம் பேசினார்கள். ஆனாலும் எனக்கு கணவர்தான் முக்கியம் என்று கூறி மசியவில்லை ரமலத். இதையடுத்து விவாகரத்துக்கு சம்மதிக்கும்படி ரமலத்துக்கு நெருக்கடிகளை கொடுக்க ஆரம்பித்தனர் திரையுலக முக்கிய புள்ளிகள் சிலர். எப்படியும் தன் கணவர் தன்னுடன் வாழப்போவதில்லை; நயன்தாராவுடன்தான் போவார் என்பதை புரிந்து கொண்ட ரமலத், விவாகரத்துக்கு சம்மதிப்பதற்காக பேரம் பேச ஆரம்பித்தார். திரைமறைவு பேச்சுவார்த்தைக்கு பிறகு, பல லட்சம் ரொக்கப்பணம் மற்றும் பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை ரமலத்துக்கும், குழந்தைகளுக்கும் எழுதிக் கொடுக்க பிரபுதேவா சம்மதித்தார்.
வரும் ஜூன் மாதம் விவாகரத்து வழக்கில் தீர்ப்பு சொல்லப்படும் என எதிர்பார்க்கப்ப்டுள்ள நிலையில், சொன்னபடி தனது சொத்துக்களை மனைவி ரமலத் மற்றும் குழந்தைகள் பெயருக்கு எழுதிக் கொடுக்கும் பணிகளில் இறங்கியிருக்கிறார் பிரபுதேவா. ஜூலை மாதம் நயன்தாராவை திருமணம் செய்ய திட்டமிட்டுள்ள பிரபுதேவா, திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்க வேண்டாம் என்று நயன்தாராவிடம் கூறி விட்டாராம். நடிகராக மட்டுமல்லாது ஹிட் இயக்குனராக இருப்பதால் வருமானத்திற்கு பஞ்சமில்லை; என் வருமானத்தில் குடும்பம் நடத்திக் கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார் பிரபுதேவா. இதனால் அம்மணியும் புதிய படங்கள் எதிலும் ஒப்பந்தமாகாமல் கல்யாணத்திற்காக காத்திருக்கிறார்.
இந்த ட்ராக் ஒருபுறம் இப்படிச் செல்ல... இன்னொருபுறம் ஹன்சாகா மோத்வானியுடனான பிரபுதேவாவின் காதல் கிசுகிசு கிணற்றில் போட்ட கல்லாகவே கிடக்கிறது. பிரபுதேவா இதுபற்றி வாய்திறக்க மறுக்கிறார். நயன்தாராவுக்காக சொத்துக்களையெல்லாம் இழந்தாகி விட்டது; எங்கே ஹன்சிகா பற்றி பேசி நயன்தாராவையும் இழக்க வேண்டியிருக்குமோ என்று பயப்படுகிறதாம் நடனம். கஷ்ட காலம்தான்!

0 comments :
Post a Comment