background img

புதிய வரவு

சாய்பாபா உடல் அடக்கம் செய்யப்பட்டது-லட்சக்கணக்கானோர் இறுதி அஞ்சலி

புட்டபர்த்தி: சத்ய சாய்பாபாவின் உடல் இன்று காலை அடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று நள்ளிரவு வரை பல லட்சம் பேர் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

பிரசாந்தி நிலையமே மக்கள் கடலாக காட்சி அளிக்கிறது. பெருகி வரும் கண்ணீர், கூப்பிய கைகள், சோகமயமான முகங்களுடன் லட்சக்கணக்கான பக்தர்கள் பிரசாந்தி நிலையத்தில் குவிந்து சாய்பாபாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். நேற்று நள்ளிரவு வரை பாபாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இன்று காலை 9 மணிக்கு சாய்பாபா உடல் அடக்க நிகழ்ச்சிகள் தொடங்கி உடல் அடக்கம் செய்யப்பட்டது.

பிரசாந்தி நிலைய வளாகத்திலேயே 7 அடி ஆழம் மற்றும் 12 அடி நீள சமாதியில் சாய்பாபாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் சமாதியைத் தோண்டும் பணி நடந்து வந்தது.

உடலை குழிக்குள் இறக்கியதும், அது குருசேத்திராவிலிருந்து கொண்டு வரப்பட்ட மண்ணால் மூடப்பட்டது. பிறகு உப்பு, வெள்ளி, தங்கம், நவரத்தினங்களும் அதில் நிரப்பப்பட்டது. படுக்கை வசமாக உடல் அடக்கம் செய்யப்பட்டது.

உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் சாய்பாபாவின் தங்கச் சிலையும், நினைவிடமும் பிரமாண்டமாக அமைக்கப்படவுள்ளது.

அத்வானி உள்ளிட்டோர் பங்கேற்பு

சாய்பாபா உடல் அடக்க நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் அத்வானி, ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டி, கர்நாடக முதல்வர் எதியூரப்பா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள், பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

உடல் அடக்கம் செய்யப்பட்டபோது திரையிட்டு அந்த நிகழ்ச்சியை மூடியிருந்தனர். உடல் அடக்கம் முடிந்த பிறகுதான் திரை விலக்கப்பட்டது. அதன் பிறகு மங்களாரத்தி நடைபெற்று இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகள் முடிவடைந்தன.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts