background img

புதிய வரவு

சமையல் Indane கேஸ் பதிவு: 24 மணி நேர சேவை

சமையல் கேஸ் சிலிண்டரை பதிவு செய்ய 24 மணி நேர செல்பேசி தானியங்கி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் "இண்டேன்' சிலிண்டர்களைப் பெற இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


இதற்காக 8124024365 என்ற செல்பேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செல்பேசி எண்ணை அழைத்து சிலிண்டரை பதிவு செய்து கொள்ளலாம். தமிழ் அல்லது ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பதிவு செய்யலாம்.


குறிப்பிட்ட எண்ணை அழைத்து, அதில் வாடிக்கையாளர் தனக்குத் தேவையான மொழியை தேர்வு செய்ய வேண்டும். அதன்பின்பு, வாடிக்கையாளர் தனது ஏஜென்சியின் தொலைபேசி எண்ணை பதிவு செய்ய வேண்டும்.

பதிவு செய்யப்பட்ட ஏஜென்சியின் பெயர் தானியங்கி கருவியின் மூலம் கூறப்படும். ஏஜென்சியின் பெயரை சரிபார்த்த பின்பு, கேஸ் ஏஜென்சி வாடிக்கையாளர் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.


பதிவு செய்து முடித்தவுடன் குறுந்தகவல் மூலம் கேஸ் பதிவு எண் உள்ளிட்ட தகவல்கள் செல்பேசிக்கு அனுப்பப்படும். இதன் மூலம் எளிதில் வாடிக்கையாளர்கள் தங்கள் கேஸ் சிலிண்டரைப் பதிவு செய்து கொள்ளலாம்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts