background img

புதிய வரவு

நடிகை தமன்னா கோர்ட்டில் வழக்கு

நடிகை தமன்னா நடித்த சோப்பு விளம்பர படத்தை ஒப்பந்த காலம் முடிந்த பிறகும் வெளியிட்டு வந்ததால் அதற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

இதுதொடர்பாக நடிகை தமன்னா சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், நான் புதுச்சேரியைச் சேர்ந்த பவர் சோப்பு விளம்பரத்தில் ஒரு ஆண்டு ஒப்பந்தம் போட்டு நடித்துக் கொடுத்தேன்.

இப்போது விப்ரோ என்ற சோப்பு நிறுவனத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளேன். பவர் சோப்பு விளம்பர படத்தை ஒப்பந்த காலம் முடிவடைந்த பிறகும் வெளியிட்டு வருவதால், நான் புதிய விளம்பரத்தில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


எனவே அந்த விளம்பரத்தில் நான் நடித்ததை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.


இந்த மனுவை நீதிபதி ராமசுப்பிரமணியம் விசாரித்து மேற்கண்ட விளம்பர படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்தார். மேலும் பவர் சோப்பு நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts