background img

புதிய வரவு

வ‌ஞ்‌சிர‌ம் ‌பி‌ரியா‌ணி

தேவையானவை:

வ‌ஞ்‌சிர‌ம் ‌- 1/2 ‌கிலோ
பாசும‌தி ‌அ‌ரி‌சி - 1/2 ‌கிலோ
வெ‌ங்காய‌ம், த‌க்கா‌ளி - 5
ப‌ட்டை, லவ‌ங்க‌ம், ‌பி‌ரி‌ஞ்‌சி இலை - தேவையான அளவு
இ‌ஞ்‌சி, பூ‌ண்டு வ‌ிழுது - 3 தே‌க்கர‌ண்டி
பு‌தினா, கொ‌த்தும‌ல்‌லி - ‌1 க‌ப்
த‌‌யி‌ர் - 1 கப்
ப‌‌ச்சை‌மிளகா‌ய் - 4
‌மிளகா‌ய்‌த்தூ‌‌ள் - 3 தே‌க்கர‌ண்டி
ம‌ஞ்ச‌ள் தூ‌ள், உ‌ப்பு - தேவையான அளவு
எ‌ண்ணெ‌ய் - 1 க‌ப்
எலு‌மி‌ச்சை - 1

செ‌ய்முறை:

‌மீ‌ன் து‌ண்டுகளை சு‌த்த‌ம் செ‌ய்து உ‌ப்பு, ம‌ஞ்ச‌ள் தூ‌ள் போ‌ட்டு ஊற‌விடவு‌ம். வெ‌ங்காய‌ம், த‌க்கா‌ளியை நறு‌க்கவு‌ம்.

கு‌க்க‌‌ரி‌ல் எ‌ண்ண‌ெ‌ய் ஊ‌ற்‌றி ப‌ட்டை, லவ‌ங்க‌ம், ‌பி‌ரி‌‌ஞ்‌சி இலை, பு‌தினா, கொ‌த்தும‌ல்‌லி போ‌ட்டு‌த் தா‌ளி‌க்கவு‌ம்.

வெ‌‌ங்காய‌ம், த‌க்கா‌ளி, இ‌ஞ்‌சி பூ‌ண்டு ‌விழுதை போ‌‌ட்டு வத‌க்கவு‌ம்.

த‌யி‌ர், ‌உ‌ப்பு, மிளகா‌ய்‌த் தூ‌ள், அ‌ரி‌சியை‌ப் போ‌ட்டு த‌ண்‌ணீ‌ர் ஊ‌ற்‌றி ‌கிள‌றி‌விடவு‌ம்.

த‌ண்‌ணீ‌‌ர் கொ‌தி‌‌க்கு‌ம் போது வ‌ஞ்‌சிர‌ம் ‌மீ‌ன் து‌ண்டுகளை பர‌ப்‌பி கு‌க்கரை மூடவு‌ம். ‌

ஒரு ‌வி‌சி‌ல் வ‌ந்தது‌ம் கு‌க்கரை இற‌க்‌‌கி எலு‌மி‌ச்சை‌சாறை ‌பி‌ழி‌‌ந்து பரிமாறவு‌ம்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts