background img

புதிய வரவு

தயிர் சீடை

சாதாரண சீடை அனைவருக்கும் தெரியும். ஆனால் தயிர் சீடை செய்வது எப்படி என்று தெரியுமா? தெரிந்துகொள்ளுங்கள்.

அரைப்படி புளித்த நல்ல கட்டித் தயிரை ஒரு வெள்ளைத் துணியில் கொட்டி முடிச்சுப் போட்டு தொங்கவிட்டால் மூன்று மணி நேரத்திற்குள் அதிலுள்ள நீர் வடிந்துவிடும்.

அரைப்படி அரிசியை ஊறவைத்து, நைசாக அரைத்து சலித்துக் கொள்ளவும்.

பின்னர், அரிசி மாவில் 100 கிராம் வெண்ணெயை போட்டு ஒரு பிடி உப்பு போட்டு பிசைந்து கொள்ளவும்.

அதன்பின்னர், தோல் சீவிய விரல் நீள இஞ்சி, மிளகாய் வற்றல் பத்து, பெருங்காயம் ஒரு துண்டு ஆகியவற்றை நைசாக அரைத்து எடுத்து மாவில் போடவும்.

பிறகு, முடிச்சிலுள்ள வடிந்த தயிரை போட்டு நன்கு பிசையவும். (சுமார் 10 நிமிடமாவது பிசைய வேண்டும்)

தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் விட்டு பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டி வெள்ளைத் துணியில் தட்டி வைக்கவும்.

சற்று ஆறியதும், வாணலியில் நெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் சீடைகளைப் போட்டு ஓசையடங்க வேகவிட்டு எடுக்கவும்.

அவ்வளவுதான் தயிர் சீடை தயார். இது சுவையாகவும், நாட்படவும் இருக்கும்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts