background img

புதிய வரவு

கற்பழிப்பு முயற்சியில் மாணவி கொலை-உடலை தூக்கில் தொங்கவிட்டு வாலிபர் ஓட்டம்

கோவை: பிளஸ்-2 மாணவியை கற்பழிக்க முயன்ற அவரது உறவுக்கார வாலிபர், அந்தப் பெண்ணை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டுவிட்டு தப்பியோடிவிட்டார்.

கோவையை அடுத்துள்ள துடியலூர் நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் பெரியண்ணன் மகள் தீபிகா (16). ஆர்.வி.நகரில் பாட்டி கனகலதா வீட்டில் தங்கி இருந்து பிளஸ்-2 படித்து வந்தார். தீபிகாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான சதீஷ் குமாருக்கும் (24) பழக்கம் இருந்து வந்தது.

முதலில் அத்தை மகன் என்ற உறவு இருப்பதாக நினைத்து சதீஷ்குமாருடன் தீபிகா பழகியுள்ளார். ஆனால், அவர் அத்தை மகன் அல்ல என்றும் உங்கள் இருவருக்கும் இடையே அண்ணன்- தங்கை உறவுதான் என்றும் தீபிகாவிடம் கூறிய கனகலதா, தகாத உறவை துண்டிக்குமாறு எச்சரித்திருந்தார்.

இந் நிலையில் நேற்றிரவு தீபிகாவின் அறைக்குள் நுழைந்த சதீஷ்குமார் தீபிகாவை கற்பழிக்க முயன்றுள்ளார். அவர் உடன்படாததால் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, கொலையை மறைப்பதற்காக தீபிகாவை தூக்கில் தொங்க விட்டுள்ளார்.

சத்தம் கேட்டு அந்த அறைக்கு ஓடிய கனகலதாவை தள்ளி விட்டுவிட்டு அறைக்கதவை வெளியிலிருந்து பூட்டிவிட்டு அங்கிருந்து சதீஷ்குமார் தப்பி ஓடிவிட்டார்.

அறைக்குள் சிக்கிய கனகலதா போட்ட சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கதவை திறந்தனர். போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் வந்து தீபிகாவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

தப்பியோவிட்ட சதீஷ்குமாரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts