background img

புதிய வரவு

ஸ்ரீதேவி கடல் கன்னி முத்துமாரியம்மன் ஆலயம்

ஸ்தல வரலாறு::

திருவல்லிக்கேணி கடற்கரையில் சீரணியரங்கம் அருகாமையில் அமைந்துள்ளது இவ்வாலயம். கடந்த ஆறு வருடங்களுக்கு முன் மீனவர்கள் சிலர் கடலில் மீன்பிடித்துக் கொண்டு இருந்த போது நடுக்கடலில் இங்குள்ள அம்மன் சிலையைக் கண்டுள்ளார்கள்.

பின்னர் இவ்வம்மன் சிலையை கொண்டு வந்து கோயிலமைத்து கொண்டாடி வருகிறார்கள். இக்கோயிலில் அம்மனின் சிலை தெய்வ கடாட்சத்துடன் விளங்குகிறது.

ஐந்து தலை கொண்ட நாகம் குடைபிடிக்க கிரீடத்தில் பிறை சந்திரன் சுடர்விட, சிரசு மட்டும் கடலலைகளையும், சூரிய சந்திரர்களையும் ஆசிர்வதிக்கும் படியான வகையில் அன்னை ஸ்ரீதேவி கடல்கன்னி முத்து மாரியம்மன் அழகே வடிவாக அருள்பாவிக்கிறாள்.

போக்குவரத்து வசதி::

இந்த கோவில் திருவல்லிக்கேணி கடற்கரையில் சீரணியரங்கம் அருகில் அமைந்துள்ளது.திருவல்லிக்கேணிக்கு செல்ல அனைத்து பகுதிகளிலிருந்தும் பேருந்து வசதி உள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts