background img

புதிய வரவு

வெள்ளிக்கிழமை விரதம்

சித்திரை மாதம் சுக்கில பட்சத்து முதல் சுக்கிர வாரம் (வெள்ளிக்கிழமை) தொடங்கி ஒவ்வொரு சுக்கிர வாரமும் உமா தேவியாரை வணங்கி மனம் உருகி இருக்கும் விரதம் சுக்கிரவார விரதம் எனப்படும். இதை வெள்ளிக்கிழமை விரதம் என்று கூறுவதுண்டு.

அரக்கர்களால் அவதிப்பட்ட தேவர்கள் அம்பாளை நோக்கி தொழுது வேண்டினர். அப்போது அம்பாள் அவர்களுக்கு அபயம் அளித்து அரக்கர்களை வதம் செய்தாள். தேவர்களையும் முனிவர்களையும் காத்து ரட்சித்தாள். இதை முன்னிட்டே அம்பாளை தொழும் சுக்கிர வார விரதம் இருக்கும் வழக்கம் ஏற்பட்டது.

இவ்விரத தினங்களில் ஒருபொழுது பகலில் உணவு கொள்ள வேண்டும். அம்பாளை பற்றிய பாராயணம், கதைகள் ஆகியவற்றை படிக்கலாம். மாலை பொழுதில் இல்லத்தில் அம்பாள் படத்தின் முன் குத்துவிளக்கு ஏற்றி வைத்து பூஜிக்கலாம்.

கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து அம்பாளை வழிபடலாம். தேவிக்கு விளக்கு ஏற்றும்பொழுது ஐந்து வகை எண்ணையை பயன்படுத்த வேண்டும். 1) நெய், 2) விளக்கெண்ணெய், 3) வேப்பெண்ணெய், 4) இலுப்பை எண்ணெய், 5) தேங்காய் எண்ணெய் இவை ஐந்தும் கலந்து ஏற்றினால் தேவியின் அருள் சக்தி கிடைக்கும.

அம்பாளை வழிபட்டு சுக்கிர வார விரதம் மேற்கொள்ளுவதால் சகல சௌபாக்கியங்களும் ஏற்படும். மீனாட்சி கண்ணாலேயே கருணை செய்யும் மேன்மை மிக்கவள். விசாலாட்சி இகத்திற்கு இதமளிக்கும் சக்தியாவாள்.

காமாட்சி இரு கண்களிலும் கருணை பொழிந்து நலன்களை அருளும் சகல சக்தியும் வாய்ந்த தெய்வமாவாள். சுக்கிர வார விரதத்தால் சகல சக்தியும் வாய்ந்த அம்பாள் சகல சௌபாக்கியங்களும் அருள்வாள்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts