background img

புதிய வரவு

முட்டி மோதிய தப்ஸி.. மூக்குடைத்த சூர்யா!

கே வி ஆனந்த் இயக்கத்தில் அடுத்து சூர்யா நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க பெரும் போட்டியே நடக்கிறதாம் இளம் நாயகிகளுக்குள்.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில், சூர்யாவுக்கு ஜோடியாக முதலில் பேசப்பட்டவர் மேக்னா ராஜ். ஆனால் ஹீரோவின் பார்வை அவர் மீது படவில்லையாம்.

அதனால் தப்ஸி, சமந்தா மற்றும் காஜல் அகர்வாலின் புகைப்படங்களைக் காட்டினார்களாம்.

ஆனால் சூர்யாவோ, தீபிகா படுகோனை முயற்சி செய்யுங்கள் என கூறிவிட்டாராம், அவரது ரேஞ்ச் தெரியாமல். அங்கே போனால், நான் சூப்பர் ஸ்டாரின் ஜோடி இப்போ. சம்பளம் 6 கோடி என கைகளை விரிக்க, தலை தெறிக்க ஓடிவந்திருக்கிறார்கள்.

இப்போது காஜல் அகர்வாலை முயற்சித்துக் கொண்டிருக்கிறார்களாம். தப்ஸியிடம் பேசலாமா என்று கேட்டதற்கு, சூர்யாவிடமிருந்து வந்த பதில், "தப்ஸி வேணாம்!"

விஷயம் கேள்விப்பட்ட தப்ஸி ஏக கோபமாகி, சாபம் விட ஆரம்பித்துவிட்டாராம்!

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts