புதுடில்லி: காமன்வெல்த் ஊழல் புகார் தொடர்பாக கைது செய்யப்பட்ட சுரேஷ் கல்மாடி, இந்திய ஒலிம்பிக் சங்க (ஐ.ஓ.ஏ.,) தலைவர் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார். புதிய தலைவராக வி.கே.மல்கோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 1996ல் இந்திய ஒலிம்பிக் சங்கத்தலைவராக தேர்வு பெற்றார் சுரேஷ் கல்மாடி. தொடர்ந்து 2004 வரை பணிபுரிந்த இவர், 2004, 2008ல் மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து 15 ஆண்டுகளாக பணியில் இருந்து வந்தார்.
கடந்த ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டியின் ஒருங்கிணைப்புக் குழு தலைவராக கல்மாடி செயல்பட்டார். அப்போது, பல்வேறு வகைகளில் ஊழல் செய்ததாக இவர் மீது, 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதன் அடிப்படையில் நேற்று முன்தினம் கல்மாடி, கைது செய்யப்பட்டார்.
ஐ.ஓ.ஏ.,யில் கல்மாடியின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு (2012) வரை உள்ள நிலையில், தலைவர் பதவியில் இருந்து நேற்று அதிரடியாக நீக்கப்பட்டார். இவருக்குப் பதில் தற்போது துணைத் தலைவராக உள்ள வி.கே.மல்கோத்ரா, தற்காலிக தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதுகுறித்து மல்கோத்ரா கூறுகையில்,"" சர்வதேச ஒலிம்பிக் சங்க விதிகளின் படி, தலைவர் பதவி காலியாக இருக்கக்கூடாது. இதனால், தற்காலிக தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டேன். ஐ.ஓ.ஏ.,யின் பொதுச் செயலர் ரந்திர் சிங் டில்லி வந்தபின், அவரை கலந்து ஆலோசித்து, விரைவில் நிர்வாகக்குழு கூட்டத்தை கூட்ட உள்ளோம். அதில் அனைத்து பிரச்னைகளும் விவாதிக்கப்படும்,'' என்றார்.

0 comments :
Post a Comment