டெல்லி மாநகராட்சி புதிய மேயரை தேர்வு செய்ய நேற்று தேர்தல் நடந்தது. மேயர் பதவிக்கு பா.ஜ.க. சார்பில் ரஜினி அபி, காங்கிரஸ் சார்பில் சவீதா சர்மா போட்டியிட்டனர். டெல்லி மாநகராட்சி கவுன்சிலர்கள் 272 பேர் மேயரை தேர்வு செய்ய வாக்களித்தனர்.
நேற்று மாலை ஓட்டு எண்ணிக்கை நடந்தது. பா.ஜ.க. பெண் வேட்பாளர் ரஜினி அபி 170 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் சவீதாவுக்கு அதிக வாக்குகள் கிடைக்க வில்லை. அவர் 88 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். 8 வாக்குகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டது.
டெல்லி புதிய மேயராக தேர்வாகியுள்ள ரஜினி அபி டெல்லி பல்கலைக்கழகத்தில் 19 ஆண்டுகள் பேராசிரியராக பணிபுரிந்தவர். முகர்ஜி நகர் தொகுதியில் இருந்து தேர்வான அவர் கடும் போட்டிக்கு பிறகு மேயர் ஆகி உள்ளார். டெல்லி நகரை சுத்தமான, பசுமையான நகரமாக மாற்ற பாடுபட போவதாக ரஜினி அபி அறிவித்துள்ளார். துணை மேயராக பா.ஜ.க. வேட்பாளர் 39 வயதான அணில் சர்மா தேர்வானார்.

0 comments :
Post a Comment